சங்கமம்

இந்திய அணியில் பும்ராவுக்கு மாற்றாக சிராஜ் சேர்ப்பு..!

இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி,டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார் பும்ரா, டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மீதமுள்ள 2 போட்டிக்கு இந்திய அணியில் பும்ராவுக்கு மாற்றாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 உலககோப்பை தொடருக்கு பும்ராவுக்கு மாற்று வீரராக இன்னும் யாரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *