கடலில் புதைந்துள்ள திமிங்கல கல்லறைகளை அற்புதமாக படம்பிடித்த சுவீடன் புகைப்படக் கலைஞருக்கு “ஸ்கூபா டைவிங் 2022” விருது!

நீருக்கடியில் திமிங்கல கல்லறைகளை அற்புதமாக படம்பிடித்துக் காட்டிய சுவீடன் நாட்டு புகைப்படக் கலைஞர் அலெக்ஸ் டாசன் நீருக்கடியில் புகைப்படப் போட்டியான ‘ஸ்கூபா டைவிங் 2022’ புகைப்படப் போட்டியில் (வைட் ஆங்கிள் ஷாட்)பரந்த கோணத்தில் எடுக்கப்படும் புகைப்படப் பிரிவில் முதல் பரிசை தட்டிச் சென்றார். டாசன் மற்றும் அவரது உதவியாளர் அன்னா வோன் போடிச்சர் ஆகியோர் கிரீன்லாந்தில் உள்ள தாசிலாக் விரிகுடாவில் 3 அடி நிரம்பிய பனிக்கட்டிக்கு கீழ் இருக்கும் படங்கள் வெளியாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

கிரீன்லாந்தில் உள்ள தாசிலாக் விரிகுடாவில் உள்ளூர் இன்யூட் வேட்டைக்காரர்கள் திமிங்கலத்தின் சடலங்களை சேகரிக்கின்றனர். அவற்றை உரித்த பின்னர், திமிங்கல எலும்புகள் கடலில் வீசப்படுகின்றன. அவர் நீருக்கடியில் தனது கேமராவில் படம்பிடித்த திமிங்கல கல்லறையின் சில புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். “ஸ்கூபா டைவிங் இதழ் எனது படத்தை வெற்றியாளராகத் தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அலெக்ஸ் டாசன் கூறுகையில், “பொதுவாக, இதுபோன்ற திமிங்கல எலும்புகளைப் பார்க்க நீர்மூழ்கிக் கப்பல் தேவைப்படும். ஆனால், கிரீன்லாந்தில், திமிங்கல எலும்புகள் மேற்பரப்பிலிருந்து 15 முதல் 20 அடிக்கு கீழே உள்ளன” என்றார். அவர்கள் இருவரும் ஆழ்கடலில் கிட்டத்தட்ட 20 திமிங்கல சடலங்களுக்கு மத்தியில் நீந்திச் சென்று கேமராவில் படம்பிடித்தனர்.இதற்காக அவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பனிக்கட்டிக்கு அடியில் நீந்தி உள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button