பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி நிற்கும் தரமான இணையத்தளம்… ஏலையா க.முருகதாசன் (ஜேர்மன்) வாழ்த்துச் செய்தி

திரு.யாழ். பாஸ்கர் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு அவுஸ்திரேலியாவிலிரந்து வெளிவரும் பன்முக எழுத்தாளுமைகளை இனங்காட்டி வருகின்ற அக்கினிக்குஞ்சு இணையத்தளம் தனது பதினாறாவது ஆண்டினை நிறைவு செய்து தொடரும் இரவு வேளையில் இவ்விணையத்தின் பிரதம ஆசிரியரை பெருமையுடன் வாழ்த்தியும் பாராட்டியும் மகிழ்கிறேன்.
பதினாறாவது ஆண்டின் முதிர்ச்சியைக் கொண்டாடும் விதமாக எதிர்வரும் .6.6.26 அன்று இசையருவி நிகழ்ச்சியை நடத்தவிருக்கின்றார்.
இந்நிகழ்வசில் தமிழகத் தொலைக்காட்சிப் பாடல் போட்டியில் பங்கு கொண்ட பாடகர்கள் பங்குகொள்ளவிருக்கின்றனர்.
ஏம்மால் 1914 ஆம் ஆண்டு 26 எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து எழுதிய விழுதல் என்பது எழுகையே என்ற நாவலை தனது இணையத்தளத்தில் ஒருவருட காலமாக தொடர்ந்து பிரசுரித்து ஆதரவு தந்ததிலிருந்து எமது இலக்கிய ஊடகத் தொடர்பு ஆரம்பித்து அது பின்னர் நட்பாக வளர்ந்து விருட்சமாகிக் கொண்டேயிருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
இந்த இணையத்தளத்தில் உடனுக்குடன் இலங்கை இந்தியா தொட்டு உலகெங்கினும் அன்றாடம் நடக்கும் முக்கியமான செய்திகள் வெளிவருவதுடன் கட்டுரைகள்,கவிதைகள்,கதைகள் எனப் பன்முக எழுத்தாற்றலை கொண்டவர்களால் இவ்விணையத்தளம் நிறைநிலை கொண்டு வருகின்றது.
நெடுங்கால அனுபவம் கொண்ட எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாது எழுத ஆர்வப்படும் ஆரம்ப எழுத்தாளர்களையும் வளர்த்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இவ்விணையத்தள ஆசிரியர் களம் அமைத்துக் கொடுத்து வருவதைப் பார்க்க முடிகின்றது.
நடுகைக்காரி,ஆகாயப்பந்தல்,சிறுகதைகள் என்ற தொடர்கதைகள் உட்பட எனது பலதரப்பட்ட கட்டுரைகளைத் தொடர்ச்சியாக பிரசுரித்து எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருவதுடன் எதிர்வரும் 04.07.26 அன்று என்னால் ஜேர்மனியில் வெளியீடு செய்யவிருக்கின்ற அப்புவின் சால்வை என்ற சிறுகதைத் தொகுப்புக்கு பல்வேறுபட்ட ஒத்துழைப்பினை இவ்விணையத்தள பிரதம ஆசிரியர் வழங்கி வருவதற்கு என்றம் நன்றியுடையவனாக இருப்பேன்.
இவ்விணையத்தளத்தில் வெளிவந்த பெரும்பாலான சிறுகதைகளே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.பல ஆண்டுகளுக்கு முன் சஞ்சிகையாக வெளிவந்து இப்பொழுது பல்வேறு நாடுகளிலுமிருக்கின்ற எழுத்தாளர்களின் ஆக்கங்களுடன் இவ்விணையத்தளம் உலகத் தமிழ் இணையத்தளமாக தம் தரநிறை வழுவாது வெளிவருவது பெரும் சாதனையாகும்.
அவரின் ஊடக மற்றும் எழுத்தாளுமைக்காக மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியுடன் வாழ்த்தியம் , பாராட்டியும் பெருமை னொள்கிறேன்.
அன்புடனும்,வாழ்த்தகளுடனும்
ஏலையா க.முருகதாசன், ஜேர்மன் ,2026
![]()