உயிரிழந்த சிறுவனை உயிர்த்தெழ செய்ய உப்புக் குவியலில் புதைத்த வினோத சம்பவம்..!

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சிர்வாரா கிராமத்தில், சுரேஷ் என்ற 10 வயது சிறுவன், குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்ட பெற்றோரும், கிராம மக்களும், அந்த சிறுவனை மீண்டும் உயிர்த்தெழச் செய்வதற்கு வினோத நடைமுறையை மேற்கொண்டனர். 80 கிலோ உப்பைக் கொட்டி, சிறுவனின் தலையைத் தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தையும் புதைத்தனர்.

அவன் உயிர்த்தெழுந்து விடுவான் என்ற நம்பிக்கையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்தும், உயிர்த்தெழுவில்லை. இதையடுத்து சிறுவன் சடலத்தை முறைப்படி மயானத்தில் அடக்கம் செய்தனர். மக்களின் இந்த செயலை கண்ட மற்றவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். உயிரிழந்த சிறுவனை உயிர்த்தெழ கிராம மக்கள் செய்த இந்த விநோத நடைமுறை குறித்த செய்தி தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button