சங்கதிகள்

மரண அறிவித்தல் திருமதி.இராஜேஸ்வரி மயில்வாகனம்!

மரண அறிவித்தல்!

                                            திருமதி.இராஜேஸ்வரி மயில்வாகனம்

        மலர்வு 09.12.1935                                                                                                   உதிர்வு 06.08.2022  

                                                                                                                                                       

                                                                                                                                                                           

யாழ்ப்பாணம் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேணை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.இராஜேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் கடந்த 06.08.2022 சனிக்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான சுப்பையா, கனகம்மா சுப்பையா ஆகியோரின் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான சுப்பிரமணியம், இரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,, மோகன் (மெல்பேண்), மகேந்திரன் ( சுவிஸ்லாந்து), ஜீவன் (சுவிஸ்லாந்து), காலஞ் சென்ற அகிலன் (பிரான்ஸ்), யசோ வரதராசன் (பிரான்ஸ்), குமணன் (இலண்டன்), மதனன் (மதி – மெல்பேண்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேஸ்வரி, பவானி, சீதாதேவி, வரதராசன், ஜெனிற்றா, தர்ஷினி ஆகியோரின் மாமியாரும், ரோஷினி, ஹேமப்பிரியா, சாலினி, சுவீவன், மதுசன், சீனுஜன், ஜீனுவா, ஜீவிகன், ஹாசினி, றதீனா, கிஷோன், கவீனா, சந்தோஷ், சப்றாஸ், யவினாஷ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் திங்கட்கிழமை 22.08.2022 பிற்பகல் 2.00 மணிமுதல் 3.00 மணிவரை இல்லத்திலும், பிற்பகல் 3.30 மணிமுதல் 4.30 மணிவரை இல்லத்திலும் இறுதியாக மாலை 6.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை White Lady Funerals No 25 Cooper Street, Epping Victoria – 3076 இல் பார்வைக்காக வைக்கப்படும். இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமை 23.08.2022 அன்று காலை 9.00 மணிக்கு WhiteLady Funerals 25 Cooper Street Epping இல் நடைபெற்று அதனைத் தொடர்ந்து காலை 11.45 மணிக்கு Joyce Chapel, Fawkner Memorial Park Fawkner. மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :- பிள்ளைகள். .

தொடர்புகளுக்கு :- மோகன் (மெல்பேண்) – +61 400 266 776

மதி (மெல்பேண்) – +61 430 982 841

                                                                                                                                                                                                                                                                                                                                               

 

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.