ஏர் இந்தியா பணியாளர்கள் விருப்ப ஓய்வு: 4500 பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக தகவல்

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் 4500 பேர் விருப்ப ஓய்வு செய்ய விண்ணப்பங்கள் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஏர்இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் விருப்ப ஓய்வு அறிவிக்கலாம் என்றும் அவர்களுக்கு பதிலாக திறமையான ஊழியர்களை பணியமர்த்த போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தது
இதனை அடுத்து 4500 பேர் தற்போது விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் செய்து இருப்பதாகவும் இன்னும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
தொடர்ந்து 20 ஆண்டு பணியாற்றியவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெறலாம் என கடந்த மாதம் ஏர் இந்தியா அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திறமையானவர்களை பணியில் அமர்த்த ஏர் இந்தியா நிறுவனம் இன்னொருபக்கம் நேர்காணலை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button