சங்கதிகள்

வெட்டியது யார்!” – கழுத்தில் வெட்டுக் காயத்துடன் காணப்பட்ட 30 ஆமைகள்… காவல்துறை விசாரணை

ஜப்பானியத் தீவான குமெஜிமாவின் (Kumejima) அருகில் குறைந்தது 30 கடலாமைகளின் கழுத்தில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளன.

அதுகுறித்துக் காவல்துறை சென்ற வெள்ளிக்கிழமையிலிருந்து (15 ஜூலை) விசாரணை நடத்தி வருகிறது.

அருகிவரும் பச்சைநிறக் கடல் ஆமைவகையைச் சேர்ந்த அந்த ஆமைகளில் சில மூச்சுவிட சிரமப்பட்டதாகவும் அவற்றின் உடலிலிருந்து ரத்தம் கசிந்துகொண்டிருந்ததாகவும் நம்பப்படுகிறது.

அவற்றின் கழுத்தில் காணப்படும் வெட்டுக் காயங்கள் கத்தியால் ஏற்பட்டது போலத் தெரிவதாக அதிகாரிகள் கூறினர்.

காயமுற்ற ஆமைகள் தற்போது எங்கு இருக்கின்றன என்பது தெரியவில்லை.

என்றாலும் காவல்துறையினர் அவற்றை நேரில் கண்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *