பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமுற்ற அமெரிக்கச் சிறுமி – சொந்த ஊரில் கருவைக் கலைக்க முடியவில்லை
அமெரிக்காவின் ஒஹாயோ (Ohio) மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயதுச் சிறுமி வேறொரு மாநிலத்திற்குச் சென்று கருக்கலைப்புச் செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் சொந்த மாநிலமான ஒஹாயோவில் கர்ப்பக் காலம் 6 வாரத்தைத் தாண்டிவிட்டால் கருக்கலைப்புக்கு அனுமதி கிடையாது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கும் அது பொருந்தும்.
அதனால் அந்தச் சிறுமி அருகில் உள்ள இண்டியானா (Indiana) மாநிலத்திற்குச் சென்று கருக்கலைப்புச் செய்துகொண்டதாக ஒஹாயோ காவல்துறை தெரிவித்தது.
அந்தச் சிறுமி 6 வாரம் கர்ப்பமாக இருந்தார்.
அவரைப் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் 27 வயது கெர்சன் ஃபுவன்டஸ் (Gerson Fuentes) என்ற ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை அமெரிக்காவில் 13 மாநிலங்களில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
![]()