சங்கதிகள்

முதல்வருக்கு வழங்கப்பட்ட டீ சூடாக இல்லை: அதிகாரிக்கு நோட்டீஸ்

முதல்வருக்கு வழங்கப்பட்ட டீ சூடாக இல்லை என்பதால் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் பருகுவதற்கு வழங்கப்பட்ட டீ சூடாக இல்லை என்பதால் பொறுப்பு அதிகாரி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
இந்த நோட்டீஸ் காரணமாக அதிகாரிகள் தரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது இந்த நோட்டீசில் முதல்வருக்கான காலை உணவு ஏற்பாடு செய்யும் பொறுப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த அதிகாரி முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட உணவை தரம் குறைந்ததாகவும், டீ சூடாக இல்லாமல் இருந்ததாகவும் கொடுத்துள்ளார்
எனவே அதற்கு பொறுப்பேற்று அவர் மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *