கருமையான தோல் நிறம்கொண்ட நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் குறைவான உயிர்வாயு: ஆய்வு
உலகெங்கும் மருத்துவமனைகளில் உள்ள ஒரு மருத்துவக் கருவியின் குறைபாட்டால் கருமையான தோல் நிறம்கொண்ட நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் குறைவான உயிர்வாயு அளிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1970களில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட pulse oximeter என்ற கருவி, நோயாளியின் கைவிரலில் பொருத்தப்படுகிறது.
அது hemoglobin என்ற ரத்தத்தின் செந்நிற ரத்த அணுக்களின் அளவைச் சோதிக்க உதவுகிறது.
ஆனால் கருமையான தோல் நிறம்கொண்டவர்களின் hemoglobin அளவை அது தவறுதலாகக் கூட்டிக் காட்டக்கூடியது என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று.
அது தொடர்பாக நடத்தப்பட்ட புதிய ஆய்வில் அமெரிக்காவின் போஸ்டன் (Boston) நகரில் உள்ள பெத் இஸ்ரேல் டீக்கொன்னஸ் மருத்துவ நிலையத்தின் 3,069 நோயாளிகளின் மருத்துவப் பதிவுகள் ஆராயப்பட்டன.
வெள்ளை இன நோயாளிகளைக் காட்டிலும் கறுப்பு, ஆசிய, ஹிஸ்பானிக் இன நோயாளிகளுக்கு நிமிடத்திற்கு 0.2 முதல் 0.4 லிட்டர் உயிர்வாயு குறைவாகக் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
அனைத்து இனத்தவர்களையும் சரியாகச் சோதிக்கும் மருத்துவக் கருவிகள் உண்டு.
ஆனால் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை என ஆய்வுக்குழு குறிப்பிட்டது.
![]()