சங்கதிகள்
ஒன்றுசேர இவ்வளவு காலம் காத்திருந்தோம்” – ஒரே நேரத்தில் திருமணச்சடங்கு… 500 தம்பதிகளுக்கு!

அமெரிக்காவின் நியூயார்க்கில் இடம்பெற்றது அதிசய நிகழ்வொன்று…
ஒரே நேரத்தில் திறந்தவெளியில் 500 இணைகளுக்குத் திருமணச்சடங்கு இடம்பெற்றது. கிருமிப்பரவலால் அவர்களால் பெரிய அளவில் திருமணச் சடங்கை நடத்தமுடியாத ஏக்கத்தை அந்த நிகழ்வு தீர்த்தது.
அவர்களில் பலருக்கு ஏற்கனவே திருமணம் ஆனபோதிலும் பாரம்பரிய முறையில் அவர்களின் திருமணத்தை நடத்திவைக்க வெவ்வேறு சமயப் போதகர்கள் வருகை புரிந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலரது கண்களிலிலிருந்து கண்ணீர் உருண்டோடியது… எப்போதோ நடந்திருக்க வேண்டிய திருமணம் கிருமிப்பரவலால் ஒத்திவைக்கப்பட்டதை எண்ணிச் சிலர் கண்கலங்கினர்.
நீண்டகாலம் காத்திருந்த பிறகு திருமணம் செய்துகொள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சி இருக்கிறது என்று செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்,
![]()