சங்கதிகள்

ராஜபக்ஷவினரைத் துரத்தும் ‘9’…. !

ராஜபக்ஷவினருக்கு 9 ஆம் திகதி பொருத்தமற்ற நாளாக மாறியுள்ளது.

பொருளாதார நெருக்கடியை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி மக்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, மே 9 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவி விலகினார்.

பின்னர் ஜூன் மாதம் 9 ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், நேற்று ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இவற்றைவைத்து பார்க்கும்போது, ராஜபக்ஷக்களுக்கு 9 ஆம் இலக்கம் பொருத்தமற்றதாகவே கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *