சங்கதிகள்

இலங்கை போராட்டம்- பாராளுமன்ற அவசர கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணததால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர், கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கொழும்புக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை அருகே முன்னேறி சென்றனர். அங்கு தடுப்பு வேலிகளை அமைத்து ராணுவத்தினர், போலீசார் அரணாக நின்றனர். தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.

இதனால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடியுள்ளார். அவர் நேற்று இரவே தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இலங்கை பாராளுமன்ற அவசர கூட்டத்தை கூட்ட சபாயாகரிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு செய்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *