சங்கதிகள்

சுட்டுக்கொல்லப்பட்ட பெற்றோர்; ஆதரவற்றர நிலைக்குத் தள்ளப்பட்ட சிறு பிள்ளை… நிதி திரட்டி உதவும் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவின் சிகாகோ (Chicago) நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் மாண்டனர்.

அவர்களில் இருவர், இரண்டு வயதுப் பிள்ளையின் பெற்றோர்.

ஏடன் எனும் பெயர்கொண்ட அந்தப் பிள்ளையை, அவரின் தந்தை துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாத்ததாகக் கூறப்பட்டது.

சுடப்பட்ட பிறகும்கூட, அவர் பிள்ளையைத் துப்பாக்கிக் குண்டு துளைக்காமல் மறைத்தார்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள், பிள்ளையைத் தந்தையின் உடலுக்கு அடியிலிருந்து அகற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் தந்தைக்கு உதவ முயன்ற வேளையில் ஏடன் அருகில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான்…

அவன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆதரவற்றுப்போன பிள்ளைக்காகத் திரட்டப்படும் நிதியில், 2.5 மில்லியன் டாலருக்கும் (3.5 மில்லியன் வெள்ளி) மேல் சேர்ந்துள்ளது.

செல்வந்தர் பில் ஏக்மன் (Bill Ackman) 18,000 டாலர் அளித்ததாகக் குறிப்பிடப்பட்டது.

ஏடனுக்கு எப்படியாவது உதவிசெய்ய எண்ணிய ஐரினா கோலன் (Irina Colon) என்பவர் இணையத்தில் நிதித்திரட்டுக்கு ஏற்பாடு செய்தார்.

பிள்ளையை வளர்க்கவும் கவனிக்கவும் அவனுக்கு ஆதரவளிக்கவும் நிதி உதவும் என்று அவர் சொன்னார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *