Bulldozerஐக் கொண்டு காவல்துறை வாகனத்தைக் கவிழ்த்த மலேசிய ஆடவர்
போக்குவரத்து அழைப்பாணையைப் பெற்றதால் ஆத்திரமடைந்த மலேசிய ஆடவர் ஒருவர் Bulldozer என்னும் கனரக வண்டியைப் பயன்படுத்தி காவல்துறை வாகனத்தைக் கவிழ்த்தார்.
கம்போங் மெகாடாங் (Kampung Megatang) அருகிலுள்ள
ஜாலான் கெப்பாயானில் (Jalan Kepayan) காவல்துறை அதிகாரிகள் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அச்சம்பவம் நடந்தது.
Bulldozerஐ ஓட்டிக்கொண்டிருந்த ஆடவரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வண்டியை ஓட்டுவதற்கான உரிமம் அவரிடம் இல்லாததை அறிந்த காவல்துறையினர் ஆடவருக்குப் போக்குவரத்து அழைப்பாணையைக் கொடுத்தனர்.
அதனால் ஆத்திரமடைந்த அவர், தமது Bulldozer வண்டியைக் காவல்துறை வாகனம் மீது மோதினார்.
சம்பவத்தைப் பதிவுசெய்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாயின.
ஆடவரை அமைதிப்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்யும் காட்சிகளும் காணொளிகளில் இருந்தன.
சம்பவத்தில் அதிகாரிகளுக்கு எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை.
ஆனால் அவர்களின் வாகனம் மோசமாகச் சேதமடைந்தது.
![]()