பலதும் பத்தும்

70 நாடுகளை இலவசமாகவே சுற்றிய இளம்பெண்

இளம்பெண் ஒருவர் 33 வயதில் 70 நாடுகளை சுற்றி பெரிய அளவில் செலவு செய்யாமல் பயணம் செய்த தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிபு டி பெனடிக்டிஸ் (Sibu De Benedictis) என்ற 33 வயதுகொண்ட அந்த பெண் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பழக்கம் கொண்டவர். பல நாடுகளில் இவர் தங்கும் போது இலவசமாக அங்கு தங்கி உள்ளார்.

இதற்கான பதிலையும் அவர் தெரிவித்துள்ளார்., தனது கல்லூரி படிப்பை முடித்த பின் ஒவ்வொரு நாளும் நாடோடியாக சுற்ற வேண்டும் என்ற ஆசை சிபுவிற்கு உருவாகியுள்ளது.

அதேப்போல், வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அங்கே இலவசமாக தங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இது எப்படி என்றால் ஏதாவது ஒரு வீட்டில் சொந்த வீடு வைத்திருக்கும் நபர் வேறு நாட்டில் வேலைக்கு செல்லும் போது அந்த வீடு காலியாக இருக்கும்., சிபு அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக தங்கிகொள்வார்.

இது எப்படி என்றால் Trusted House-sitters என்ற தளத்தில் Sibu மெம்பராக இருப்பதால், இப்படி காலியாக இருக்கும் வீடுகளைத் தொடர்பு கொண்டு, அங்கே இலவசமாக தங்கிக் கொள்ளலாம்.

ஆனால், பதிலுக்கு, அந்த வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும், தோட்ட வேலைகள் பராமரிப்பதும் என அனைத்தையும் சுத்தமாக வைத்திருந்தாலே போதும். அதேப்போன்று ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் பணத்தை மிக சிக்கனமாக தான் செலவு செய்துள்ளாராம்.

ஆடம்பரமாக செலவு செய்யாமல், அங்கே கிடைக்கும் அதே பொருளை சிறிய கடையில் தகுந்த பட்ஜெட்டில் வாங்கிக் கொள்கிறார். மேலும், தன்னிடம் இருக்கும் டாலர்களளுக்கு எந்த நாடுகளில் அதிக மதிப்பு இருக்கிறதோ, அதற்கேற்ற வகையில் அதனை புத்திசாலித்தனமாக Sibu பயன்படுத்திக் கொள்வாராம்.

அதுமட்டுமின்றி, செல்லும் நாடுகளில் உணவகங்கள் மற்றும் பார் உள்ளிட்டவற்றில் Waiter-ஆக வேலைகள் செய்து பணத்தை சேமித்து வைக்கிறார். அவர் கொண்டு செல்லும், சூட்கேஸில் 7 ஜோடி உடை மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் மட்டுமே அவர் சூட்கேஸில் உள்ளது.

மேலும், தான் பயணம் செய்த இடங்கள் மற்றும் சிக்கனமாக எப்படி பணத்தினை செலவு செய்ய வேண்டும், பலருக்கு பயன்படும் வகையில், புத்தகம் ஒன்றையும் Sibu எழுதி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.