சங்கமம்

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!

இந்தியாவில் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்கள் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ்-இஓ, நியூசர் உள்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (30-ந்தேதி) மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளுக்கான 25 மணி நேர ‘கவுன்டவுன்’ இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

இதில் முதன்மை செயற்கை கோளான டி.எஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. வண்ண புகைப்படம் எடுக்கும் திறன் உடையது. மேலும் நியூசர் செயற்கை கோள் 155 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர்ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது.

அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும் தன்மை கொண்டது.

மேலும் இதனுடன் கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது 2.8 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைகோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் இறுதி பாகமான பி.எஸ்.4 எந்திரம் உதவியுடன் சில ஆய்வுக் கருவிகளும் வலம் வர உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *