இலக்கியச்சோலை

மதுரை இயக்குனரின் குறும்படத்திற்கு சர்வதேச விருது

மதுரை குறும்பட இயக்குனர் சதீஷ் குருவப்பன் 40, இயக்கிய ‘மிஸ்டர் காப்ளர்’ படத்திற்கு அமெரிக்காவின் சர்வதேச திரைப்பட விழாவில் சாதனை விருது அறிவிக்கப்பட்டது.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த சதீஷ்குருவப்பன் இதுவரை 17 குறும்படங்களை இயக்கியுள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மனிதருக்குரிய மரியாதையை தர வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டு இவர் 2017ல் இயக்கிய ‘மிஸ்டர் காப்ளர்’ படத்தை இதுவரை உலக அளவில் 20 கோடி பேர் பார்த்துள்ளனர். 70 லட்சம் பேர் ‘லைக்’ செய்துள்ளனர்.

இதை பாராட்டி ஏற்கனவே சாம்பியன்ஸ் ஆப் தி யுனிவர்சல், அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கப்பட்டன. இந்நிலையில் அமெரிக்காவில் எல்.டி.யு.இ., அமைப்பு நடத்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘மிஸ்டர் காப்ளர்’ படத்தை சிறந்த சாதனை படமாக தேர்வு செய்து விருது அறிவிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *