சைக்கிளில் பெட்ரோல் டேங்கை மாட்டி விநோதமாக பெட்ரோல் வாங்கிச் சென்ற இளைஞர்!

இலங்கையில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பேருந்துகளின் சேவை கணிசமாக குறைந்தது. எரிபொருட்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலையும் தொடர்கிறது. இதே நிலை நீடித்தால் பேருந்துகளின் சேவைகள் மேலும் குறைக்க நேரிடும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எரிபொருளுக்கு நெருக்கடி ஏற்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு உள்ளேயும், மாகாணங்களுக்கு இடையேயும் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, அனுராதபுரம் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர், பெட்ரோல் டேங்கை தனியாக சைக்கிளில் எடுத்துக் கொண்டு பெட்ரோலை வாங்கி சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *