சங்கதிகள்

வைத்தீஸ்வராகல்லூரி மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வும், கன்னியமர்வும்.!

கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய குடியியல் கல்விப் பாடத்தின் (Civics Education) ஓர் அங்கமாக மாணவர் பாராளுமன்றத் திட்டம் பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் செயற்பாட்டு ரீதியான அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பாக பாராளுமன்றத் திட்டம் அமைந்துள்ளது. ஜனநாயகம்அதன் பொறுப்புக்கள்சட்டத்தின் மேலாதிக்கம்வாக்கின் முக்கியத்துவம்என்பவற்றை உணரவைப்பதுடன் மாணவர்களின் பலதரப்பட்ட திறன்களை மேம்படுத்துவதே இப்பாராளுமன்றத் திட்டத்தின் நோக்கமாகும்.

அந்தவகையில் யாழ் வைத்தீஸ்வரா கல்லூரியில் உருவாக்கப்பட்ட வைத்தீஸ்வரா கல்லூரி மாணவர் பாராளுமன்றமத்தின் பாராளுமன்ற அமைச்சரவை தெரிவிற்கான தேர்தல் 02.02.2022  அன்று  தேர்தல் ஆணையாளர் திருமதி ஆ. செங்கதிர்ச் செல்வன் ஆசிரியர் அவர்களின் தலைமையிலும்பிரதி தேர்தல் ஆணையாளர் செல்வி ந.தமிழ்செல்வி ஆசிரியர் அவர்களின் வழிநடத்தலிலும் மாணவர் வாக்கெடுப்பின் ஊடாக சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியில் மூன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்குகள்  பெறப்பட்டு அன்றைய தினமே வாக்கெண்ணல் கடமைகளும் நிறைவேற்றப்பட்டு பிற்பகல் 1.00  மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக்கான கன்னியமர்வு 06.06.2022 அன்று மு.ப 9.30 மணிக்கு  கூடியது. கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இப்பாராளுமன்ற அமர்வில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அமைச்சரவை உறுப்பினர்களும் அன்றைய அமர்வுக்கான விசேட விருந்தினர்களும் பாண்ட் வாத்திய சகிதம் அழைத்துவரப்பட்டு தேசியக்கொடிகல்லூரி கொடி ஏற்றப்பட்டு இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது.

முதல் நிகழ்வாக 2022-2023 ஆண்டுகளுக்காக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர்கௌரவ செயலாளர் நாயகம் திருமதி வா. தவபாலன் அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் ஏற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதுடன் நியமனக் கடிதத்தையும் செயலாளர் நாயகம் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சரவைக்கு வருகை தந்த கௌரவ சபாநாயகர் செல்வன் ச. கஜரூபன் அவர்களின் முன்னிலையில் பிரதமர்சபை முதல்வர்பிரதி செயற்குழு தலைவர்பிரதி சபாநாயகர்அமைச்சரவையின் 10 அமைச்சர்கள் ஆகியோர் சத்திய பிரமாணம் ஏற்று பதவி பிரமாணம் செய்து கொண்டதுடன் கௌரவ சபாநாயகரிடம் இருந்து நியமனக் கடிதத்தையும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து 2022-2023 ஆண்டுக்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்றன.

கௌரவ சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வில் யாழ் கல்வி வலய சமூகவிஞ்ஞானபாட ஆசிரிய ஆலோசகர் திருமதி மே.தி. மரியநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்து பதவி வழியால் செயலாளர்நாயகமான அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் வைத்தீஸ்வரா கல்லூரி மாணவர் பாராளுமன்ற 4வது அமைச்சரவையின் முதலாவது அமர்வை அங்குரார்ப்பண  உரையாற்றி ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து சபை முதல்வர் அவர்களின் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பில்பத்து அமைச்சர்களும் தமது பிரேரணைகளை முன்வைத்தனர்.  பின்னர் பிரதமரினால் தொகுப்புரை நிகழ்த்தப்பட்டிருந்தது. பிரதி செயற்குழுத் தலைவரின் சபை ஒத்திவைப்பு பிரேரணையை தொடர்ந்து அடுத்த அமர்விற்கான திகதியை  கௌரவ சபாநாயகர் அவர்கள் அறிவித்து மன்றை ஒத்திவைத்தார்.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக திரு. விஜயகுமாரன்திருமதி. சுனந்தா விஜயகுமாரன் (முன்னாள் மாணவர்இயங்குகுழு உறுப்பினர் – யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவர் குழுமம் அவுஸ்திரேலியா) மற்றும் திரு. மோகன்குமார்திருமதி. கலாநிதி மோகன்குமார் (யா.வை.க. முன்னாள் மாணவர்லண்டன்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இத்தருணத்தில் மாணவர் பாராளுமன்ற பொறுப்பாசிரியர்கள் திருமதி அஜந்தமேரி பிரதி செயலாளர் நாயகம் அபிவிருத்திதிரு இன்பகுமார் குரூஸ் பிரதி செயலாளர் நாயகம் ஒழுக்கம்திரு ச. யசோதரன் பிரதி செயலாளர் நாயகம் நிர்வாகம் மற்றும்  கௌரவ செயலாளர் நாயகம் – அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களுக்கும் இவ் மாணவர் பாராளுமன்ற அமர்வு மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் அமைய உறுதுணையாக இருந்த ஆசிரியர் திருமதி அஜந்தா மேரி அவர்களுக்கும் ஏனைய அனைத்து ஆசிரியர்களுக்கும் அத்துடன் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த பிரதம விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை பார்ப்பதற்கு கீழே உள்ள வழித்தடத்தை அழுத்துவதன் மூலம் பார்க்கலாம் >>>

https://drive.google.com/drive/folders/1iLt9fQuGeoV4zIsdU0uLBLOzr6ugSqnn?usp=sharing

🤝நன்றி

🙏வணக்கம்

சு. மாதவன்

யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *