

![]()
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளை அமைப்பினர் அண்மையில் கல்லூரியின் வளர்ச்சி, மற்றும் மாணவர்களின் கல்வித்தேவைகளுக்காக நிதியுதவிகளை வழங்கியுள்ளனர்.![]()
இக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் – உயர்தரம் மற்றும் ஆறு முதல் பத்தாம் தரம் வரையில் கல்வி கற்கும் மாணவர்களின் தேவைகளை கவனித்து, அதற்கேற்ப நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
1999 ஆம் ஆண்டு லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கம், தொடர்ச்சியாக கல்லூரியின் வளர்ச்சிக்காக உதவி வருகிறது.
கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கோயிலில் தினமும் பூசைசெய்துவரும் பூசகருக்குரிய மாத வேதனத்தையும் லண்டன் கிளையே வழங்கி வருகின்றது. அத்துடன் வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கல்லூரியால் நடத்தப்படும் திருவிழாவுக்கும் தேவைப்பட்ட நிதியுதவியை வழங்குகிறது.![]()
கொரோனா பெருந்தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் லண்டன் பழைய மாணவர் சங்கத்தினர் தொடர்ந்தும் தமது ஆதரவையும் அனுசரணையையும் கல்லூரிக்கு வழங்கி வருகின்றனர்.
![]()
![]()
இத்தருணத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்காக பல வருடங்களாக தொடர்ந்து தமது பங்களிப்பை செலுத்தி வரும் லண்டன் கிளை சங்கத்தின் தலைவர் திரு. ரவீந்திரன் செயலாளர் திரு. ராமச்சந்திரன் பொருளாளர் திரு. பாலச்சந்திரன் ஆகியோருக்கும் அவர்களுடன் சேர்ந்து இயங்கி வரும் லண்டன் கிளை உறுப்பினர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் அத்துடன் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு தமது ஆதரவை நீண்ட நாட்களாக வழங்கிவரும் லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் நிதியத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் : சு. மாதவன்
யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவன்.
![]()