Featureகட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!…. 24…..மௌனஅவதானி.

உளவு நிறுவனங்களின் பணிகளில் ஒன்று பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போன்ற செயல்.

ஒரு நாட்டு மக்களின் நாளாந்த வாழ்க்கை அமைதியற்றதாகவிடுவதற்கு, அந்நாட்டின் அரச இயந்திரம் செயலற்ற தன்மை ஏற்படுவதற்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டமும் காரணமாகின்றது.

போராட்டங்களுக்குள் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் ஊடுருவல் ஏற்பட வாய்ப்பில்லை என்ற பொதுக்கணிப்பினை மக்கள் கொண்டிருந்தாலும் மிகவும உன்னிப்பாக கவனித்தால் அது தென்படும்.

ஒரு நாட்டு மக்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவை அவர்களுக்குக் கிடைக்கத் தவறினாலோ அல்லது தாமதமேற்பட்டாலோ மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியாளர்களாக மாறுவார்கள்.

மக்கள் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் பல்வேறுபட்ட பணிக் களங்கள் ஊடாக அரசாங்கத்துடன் இணைந்தேயிருக்கின்றார்கள்.

மக்களின் தேவைகள் பலவாக இருக்கின்றன.குறிப்பாக விலையேற்றம் என்பது மக்களை உடனடியாகவே அவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.உணவுப் பொருட்களிலிருந்து போக்குவரத்துக்கான அவர்களின் செலவினங்கள் அதிகரிக்கும் போது மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுவார்கள்.

பொருட்களின் விலையேற்றத்துக்கு பல காரணங்கள் இருந்த போதும் அக்காரணங்கள் எதையுமே போராட்டக்காரரர்கள் கவனத்தில் கொள்ளாதவாறு உளவு நிறுவனங்களின் ஒற்றர்கள் போராட்டக்குழுக்களின் முக்கிய தலைவர்களின் மூளைகளைச் சலவை செய்து வைத்திருப்பார்கள்.

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல போராட்ட அமைப்புகளின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் பலம் பலவீனத்தை அறிந்து வைத்துக் கொண்டு மிகவும் நுட்பமாக தமது எண்ணங்களை நிறைவேற்றிவிடுவார்கள்.

அரசுக்கு எதிரான அதிருப்தியை ஊதிப் பெரிதாக்குவதுதான் அவர்களின் முதல் வேலையாகும்.ஒரு நாட்டினுடைய பொருளாதாரக் கட்டமைப்பும் அதுசார்ந்து நிற்கின்ற சமூக ஒருங்கிணைப்புந்தான் மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை; கொடுக்கும்.ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அரசே பொறுப்பாகும். ஒரு சரியான அரசு இயந்திரத்தில்,ஒவ்வொரு தனிமனிதனும் தொடர்ச்சியான அரசின் பார்வைக்குட்பட்டவனாகவும் தொடுகையுள்ளவனாகவுமே இருப்பான்.

ஒவ்வொரு தனிமனிதனும் தனது அன்றாட வாழ்க்கை எவ்வித தொந்தரவும் இல்லாமலும் சலிப்பற்ற நிலையிலும் இருக்க வேண்டுமேன்றே விரும்புவான்.

குடும்பம் என்ற கணவன் மனைவி பிள்ளைகள் என்ற குழுத்தன்மைக்குள் ஏற்படும் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான சூழ்நிலையையும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கிருக்கின்றது.

தனிமனிதன் என்ற ஒரு அலகின் தேவை என்ன என்பதை உணர்ந்த அரசுகள், மாற்றம் பெற்று வரும் பொருளாதாரச் சூழ்நிலைகள் அத்தனைக்கும் ஈடுகொடுக்கும் அதே வேளை தனிமனிதனின் அன்றாட வாழ்க்கை அதனால் பாதித்துவிடாதபடி செலவினங்களுக்கு ஏற்ப அவனுக்கான பொருளாதார வழிமுறைகளை சமாந்தரமாக பெற்றுக் கொள்ள வழிவகுக்கின்றது.

பொருளாதாரக் கட்டமைப்பே நாட்டுக்கான நிதிக் காத்திரத்தை வலுப்படுத்தவும் தொடர்ச்சியாக தக்க வைப்பதிலும் மிக முக்கிய பங்:கு வகிக்கின்றது.

ஒரு நாட்டினுடைய சிறப்பான பொருளாதாரக் கட்டமைப்பே ஒரு தனிமனிதனை மகிழ்ச்சியடைய வைக்கின்றது. அந்த மகிழ்ச்;சியை அவன் இழக்கும் போது அரசுக்கு எதிராக செயல்படத் தொடங்குவான்.

சிறப்பான பொருளாதாரக் கட்டமைப்பு உள்ள நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அந்நாட்டினது குடிமகன் உணர்ந்த போதும் அந்த உணர்தலை திசை திருப்பி அரசுக்கெதிராக போராட வைப்பதே உளவு நிறுவனங்களின் வேலையாகும்.

இந்த நிலையில்தான் போராட்ட அமைப்புகளில் முக்கிய பதவிகளிலிருப்பவர்களின் பலம் பலவீனம் என்பவற்றுடன்,அவர்களின் பொருளாதார நிலையையும் அவர்களுடன் பழகியவாறே அறிந்து கொள்வார்கள்.

உளவு நிறுவனங்களின் சுதேச முகவர்களாகச் செயல்படுபவர்கள் போராட்ட அமைப்புகளின் முக்கிய செயல்பாட்டாளர்களுடன் மிகவும் தந்திரமான முறையில் உரையாடி அவர்களை மெல்ல மெல்ல தாம் விரித்து வைத்திருக்கின்ற வலைக்குள் விழுத்திவிடுவார்கள்.

விழுந்தவர்களை எழுந்துவிடாதவாறு, காட்டிக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் கெட்டபெயரையும் உறுப்பினர்கள் கொள்ளப் போகும் கோபாவேசத்தையும் ஒரு எச்சரிக்கையாகச் சொல்லி வைப்பார்கள்.

ஒரு நாடு தனக்காக போராடிக் கொண்டிருக்கும் பொருளாதார நிலைகளை அவன் உணர்ந்தும், போராடுவது தனது நாட்டின் பொருளாதார நிலைகளை அது அழித்தவிடும் என்று தெரிந்த போதும், உளவு நிறுவனங்களின் ஒற்றர்களினால் தவறானதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்தியதை,உண்மை என நம்பி,புதைகுழியில் கால் வைத்தவன் நிலைபோல,மூளைச் சலவை செய்யப்பட்ட நிலையிலும், அவனுடைய பலம் பலவீனத்திற்கமைய அவனது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையிலும் அவன் அல்லது அவர்கள் அரசுக்கெதிரான தாம் மேற்கொண்ட போராட்டம் சரியானதே என்பதை, ஒற்றர்கள் எப்படிச் சொல்லிக் கொடுத்தார்களோ அவ்வாறே தமது உறுப்பினர்களை நம்ப வைக்கும் விதத்தில் பிரச்சாரம் செய்வார்கள்.தொடர்ச்சியான பிரச்சாரம் மூளைச்சலவையாக மாறும்.

ஒற்றர்களாக செயல்படுபவர்கள் அதற்கான கல்வியைக் கற்றவர்களாகவும் இராஜதந்திரிகளாகவும் இருப்பார்கள். ஒரு நாட்டில் இருக்கும் தூதரகம் அந்நாட்டினுடைய அன்றாட செயல்பாடுகளைக் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

அத்தூதரகத்தில் அதற்கென தனிப்பிரிவே இயங்கும்.

(தொடரும்)

Loading