கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!…. தொடர்: 23…… மௌனஅவதானி.

உளவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒற்றர்களை சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபடுத்தி பார்க்க இயலாது.

தாங்கள் உளவாளிகள் என்பதை அவர்கள் தங்களது உடல்மொழி மூலமாகவோ பதட்டமான முக உணர்வுகள் மூலமோ காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு நாட்டைச் சிதைப்பதற்கும் சீர்குலைப்பதற்கும் பலதிட்டங்கள் தேவைப்படுகின்றன.அவை காற்றிலே பரவும் நோயக்கிருமிகள் போன்றிருக்கும்.நோய்க்கிருமிகளை தாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம், நோய்கிருமிகள் தமது உடலின் தோலில் ஒட்டிக் கொண்டு விட்டன என்பதை அறியாது படிப்படியாக நோய்வாயப்படும் மனிதர்களைப் போன்றதே ஒரு நாடு உளவு நிறுவனங்களால் சிதைக்கப்படுகின்றன.

உலகநாடுகளுக்கு தான்தான் எஜமான் என்பதை தொடர்ந்து நிரூபித்து அதனைத் தக்க வைப்பதில் வல்லரசு நாடு அல்லது வல்லரசு நாடுகள் அதற்கான திட்டத்தை வரைகின்றன.

இன்றைய உலகநாடுகள் வணிக வலையமப்பினால் சூழப்பட்டவிட்டன.தமது நாட்டு உற்பத்திப் பொருட்களை வணிகமயப்படுத்துவதற்காகவும் வலிமையற்ற நாடுகளை சிதைப்பதில் அந்நாட்டு உளவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பல்வேறுபட்ட விடயங்களுக்காக உலகநாடுகளின் தலைவர்கள் சந்திப்பதும் மகாநாடுகளை நடத்துவதும் வெறும் கண்துடைப்புக்காகவும் உலகமக்களை ஏமாற்றுவதற்காகவும் என்பது வெட்டவெளிச்சமான ஒன்றுதான்.

ஒவ்வொரு நாட்டினுடைய வெளிநாட்டுக் கொள்கையும் பிராந்திய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றது.

பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு என்ற பெயரில் நடத்தப்பட்டு அதில் அங்கம் வகிக்கும் நாடுகளே கொள்கையளவில் மட்டுமே ஒருமித்த நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த போதிலும் வணிகநிலையில் ஒரு நாட்டில் உற்பத்தியாகும் உற்பத்தி பொருட்களை அங்கம் வகிக்கும் நாடுகள் வாங்க வேண்டும் என்ற பண்டமாற்று அடிப்படையைக் கொண்டிருந்த போதிலும், உள்நாட்டு விற்பனையாளர்களாலும், வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படும் பொருட்களைப் போன்ற பொருட்களை தங்களுடைய நாட்டிலும் உற்பத்தியாக்கப்படுவதால் வெளிநாட்டிலேயிருந்து இறக்குமதியாகும் உற்பத்திப் பொருட்களை ஏன் வாங்க வேண்டுமென்ற உள்நாட்டு வணிகர்களால் ஒரு நாடு குழுமைத்தன்மையில் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றது.

இந்த பிராந்தியக் கூட்டமைப்புக்குட்பட்ட நாடுகளை தமது வசப்படுத்தி வைத்திருக்கும் வல்லரசு நாடு அல்லது வல்லரசு நாடுகள் முரண்பாட்டுச்சூழ்நிலையைப் பயன்படுத்தி நாடுகளுக்கிடையில் மனக்கசப்புகளைத் தோற்றுவிக்கின்றன.

இறக்குமதியாகும் உணவுப் பொருட்களின் தரத்தை குறைப்பது அப்பொருட்களுக்குள் மனித உடலுக்கு தீங்குவிளைவிப்பதற்கான வேதியல் பொருட்களை கலப்பது போன்ற ஆபத்தான செயல்களைச் செய்கின்றன.

ஒரு நாட்டினுடைய பிற வளங்களைவிட மனித வளமே பிரதானமானது.இக்கருத்தை இத்தொடரில் வேறொரு இடத்திலும் தெரிவித்திருந்தேன்.

என்னதான் ஒருநாடு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது பலகட்ட பரிசோதனைக்கூடாக விழிப்பாயிருந்தாலும்’கண்ணுக்குள் எண்ணையைவிட்டு’ அவதானித்துக் கொண்டிருந்தாலும் அதையும் மீறி இறக்குமதிப் பொருட்களுக்குள் மனித உடலைச் சேதப்படுத்தும் வேதியல் பொருட்களை கலந்தனுப்புவதில் உளவு நிறுவனங்கள் பலரை விலைக்கு வாங்கி தாங்கள் நினைத்ததைச் சாதித்துவிடுகின்றன.

ஒரு உளவு நிறுவனம் ஒரு நாட்டுக்குள் எப்படி அகலக் கால்களை வைக்கின்றது என்பது மலங்க விழிக்க வைக்கும் விடயமல்ல.

இப்படி யோசித்தாலே போதும்’ கலப்படம் சம்பந்தப்பட்ட செய்திகளில் மிளகில் கலப்படம் காயப் போட்ட பப்பாசி விதைகள் கலக்கப்பட்ட மிளகு கண்டுபிடிக்கப்பட்டது.சாயம் கலந்த மரத்தூசுகள் தேயிலையுடன் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.குத்தரிசிக்குள் ஆற்றுமணல் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,அரிசிக்குள் பிளாஸ்ரிக் அரிசிகள் கலப்படம், இப்படிப்பல.

மேலே குறிப்பிட்ட கலப்படங்கள் எவ்வாறு உடலுக்கு தீங்கு விளைவித்து உயிராபத்தை ஏற்படுத்துகிறதோ அது போன்றதே கண்ணுக்குத் தெரியாத வகையில் இறக்குமதிப் பொருட்களுடன் வேதியல் பொருட்கள் கலக்கப்படுகின்றன.

நோயுற்றிருக்கும் ஒருவருக்கு அந்த நோய்க்கான மருந்தைக் கொடுத்தால் நோய் குணமடையும்.அதே மருந்தை நோயில்லாத சுகதேகி பயன்படுத்தினால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும்.இந்தப் பாதிப்பு உடனடியாக வெளிப்படாவிட்டாலும் மெதுமெதுவாக அதன் பாதிப்பை உணர முடியும்.

இறக்குமதிப் உணவுப் பொருட்களில் வேதியல் பொருள் கலக்கப்படுமானால் அதனால் ஏற்படும் பாதிப்பு உடனடியாகத் தெரியாதுவிட்டாலும் மெதுவாகக் கொல்லும் விசமாக அது தொழில்படும்.

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கும் முகவர் நிறுவனங்களிலேயே நாசகார வேலையை பணம் பெண் பொருள் என்பவற்றுள் ஏதொவொன்றை லஞ்சமாகக் கொடுத்து உளவு நிறுவனங்கள் செய்கின்றன.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *