உலகின் மிகவும் வயதான நபர், 119 வயதில் ஜப்பானில் காலமானார்

உலகின் மிகவும் வயதானவர் என்ற பெருமை பெற்ற ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்த மூதாட்டியான கேன் தனகா கடந்த 19-ந்தேதி தன்னுடைய 119வது வயதில் காலமானதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

1903-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பிறந்த கேன் தனாகா, கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடைய 116-வது வயதில் மிகவும் வயதான நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்தார். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் 117 வயது மற்றும் 261 நாட்களை எட்டியபோது, ஜப்பானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வயதான நபராகவும் ஆனார்.

தனகா தன்னுடைய 19-வது வயதில் அரிசி கடை வைத்திருந்தவரை திருமணம் செய்து கொண்டார். சோடா மற்றும் சாக்லேட் உள்ளிட்ட ருசியான உணவுகளை உண்பதுடன் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது தன்னுடைய ஆயுளை அதிகரித்ததாக தனகா முன்பு குறிப்பிட்டிருந்தார்.

தனகா காலமானதையடுத்து, பிரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் இப்போது உலகின்மிக வயதான நபராக உள்ளார். அவரது வயது 118 ஆண்டு மற்றும் 73 நாட்கள் ஆகும். ஜப்பானின் மிக வயதான நபர் இப்போது ஒசாகா மாகாணத்தில் வசிக்கும் 115 வயதான ஃபுசா டாட்சுமி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *