தருமபுரியில் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்படும் கஞ்சா!
தர்மபுரி மாவட்டத்தில் Google pay- யில் பணம் செலுத்தினால் வீட்டுக்கே கஞ்சா டெலிவரி செய்யும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சூழ்நிலையில் தருமபுரியை அடுத்த மதிகோன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.
இதனையடுத்து, மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஜோதி மற்றும் அருண்குமார் ஆகியோர் நிலத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. மேலும், அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்களுக்கு Google pay மூலம் பணம் செலுத்தினால் வீட்டுக்கே கஞ்சாவை டோர் டெலிவரி செய்வதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்த செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
![]()