ஆர்யன் கான் மீதான போதை பொருள் வழக்கு: முக்கிய சாட்சி திடீர் மரணம்
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீது பதிவான போதை பொருள் வழக்கில், முக்கிய சாட்சியாக இருந்த பிரபாகர் சைல் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த அக்., மாதம் ஒரு சொகுசு கப்பலில் தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் சோதனை நடத்தினர்.
இதில், போதை பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைதாயினர்.இந்த வழக்கில், போதை பொருள் தடுப்பு பிரிவினரின் முக்கிய சாட்சியான கோசாவி என்பவர், வழக்கை முடிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசியதை கேட்டதாக, மும்பை புறநகரான செம்பூரை சேரந்த பிரபாகர் சைல், 37, கூறினார்.
இவர், கோசாவியிடம் மெய்காப்பாளராக பணியாற்றுவதாக கூறி இருந்தார். இதையடுத்து, போதை பொருள் வழக்கில் இவரும் தனிநபர் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த பிரபாகர் சைலுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் மரணம் அடைந்தாகவும் கூறப்படுகிறது. பிரபாகர் சைல் மரணத்தில் அவரது குடும்பத்தினர் எவ்வித சந்தேகமும் எழுப்பவில்லை என போலீசார் கூறி உள்ளனர்.
![]()