பிச்சை எடுத்தே மகனுக்கு ரூ80 ஆயிரத்திற்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்த தாய்…
ஒரு தாய் என்பவள் தன் மகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார். அவர் தன் வாழ்நாள் முழுவதையும் தன் குழந்தைகளுக்காகவே அர்பணிப்பார். இப்படியாக சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு தாய் பிச்சை எடுத்து ரூ80 ஆயிரத்தை நாணயமாக கொடுத்து தன் மகனுக்காக ஸ்கூட்டி வாங்க பணம் கொடுத்துள்ளார். இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
சமூகவலைத்தளங்களில் இதற்கு முன்னர் பல இடங்களில் நாணயங்களை கொடுத்து பைக் வாங்க முயன்றவர்கள் குறித்த செய்தியை படித்திருப்போம். அதே போல சமீபத்தில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு தாய் மகன் என இருவர் ஒன்றாக வசித்து வந்தனர். மகன் கூலி வேலைக்கு தினக்கூலியாக இருந்து வந்தார். தாய் பிச்சை எடுத்து பிழைத்து வந்தனர். இவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதில் மகனுக்கு நீண்ட நாட்களாக ஒரு ஸ்கூட்டி ஒன்று வாங்க வேண்டும் என கனவு இருந்தது. அது இருந்தால் தான் வேலைக்கு சென்று வர சுலபமாக இருக்கும் என கருதி தன் தாயிடம் இது பற்றி பேசியுள்ளார். இந்நிலையில் தான் தன் மகனுக்காக பிச்சை எடுத்து சேர்த்து ரூ80 ஆயிரம் பணத்தை நாணயங்களாக வழங்கியள்ளார். அதை ஒரு பக்கெட்டில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஸ்கூட்டி ஷோரூமிற்கு சென்ற அங்கு அந்த பணத்தை கொடுத்து ஸ்கூட்டி வாங்கியுள்ளார்.
ஷோரூம் ஊழியர்கள் எல்லோரும் அமர்ந்து அந்த நாணயங்களை எண்ணி சரி பார்த்து வாங்கிக்கொண்டனர்.
![]()