கேரள மாணவிக்கு லண்டனில் கத்திக்குத்து!

பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில், கேரள மாணவியை கத்தியால் குத்திய இந்திய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சோனா பிஜூ. இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கிழக்கு லண்டன் பல்கலையில் படிக்கிறார். இங்கு, ஈஸ்ட் ஹாம் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பகுதி நேர வேலையும் பார்க்கிறார். கடந்த 25ம் தேதி மதியம், சோனா பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் அம்பார்லா, 23, சோனாவுடன் வாக்குவாதம் செய்தார். திடீரென, சோனாவை கத்தியால் குத்தி விட்டு தப்பினார்.

தகவல் அறிந்து வந்த போலீஸ் சோனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பி ஓடிய ஸ்ரீராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து லண்டன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *