ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பளார் விட்ட நடிகர் அதிர்ச்சி வீடியோ
94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. அந்த விழாவில் டியூன் படத்திற்கு அதிகபட்சமாக 6 விருதுகள் கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருது வில் ஸ்மித்திற்கு கிடைத்தது.
இந்நிலையில் நிகழ்ச்சியில் வில் ஸ்மித் நடந்து கொண்டது தான் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜேடா பிங்கட் ஸ்மித்தை கிண்டல் செய்தார்.
ஜேடாவை பார்க்க ஜிஐ ஜேன் 2 போன்று இருக்கிறார் என்று கலாய்த்தார் கிறிஸ் ராக். இதை கேட்ட வில் ஸ்மித் கோபம் அடைந்து மேடைக்கு விரைந்து சென்று கிறிஸ் ராக்கை ஓங்கி அறைந்தார்.
பின் தன் இருக்கையில் அமர்ந்த பிறகு, என் மனைவியை பற்றி பேசாதே என்று எச்சரித்தார் வில் ஸ்மித். அதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ந்தார்கள்.
கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் முகத்தில் குத்தியது நிஜமா அல்லது ஸ்க்ரிப்ட்டா என்று நிகழ்ச்சியை பார்த்தவர்கள் வியக்கிறார்கள்.
ஆஸ்கர் விருது விழா டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. வில் ஸ்மித் சம்பவத்தால் நேடி ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
Will Smith punches Chris Rock at the #Oscars.
“Keep my wife’s name out of your fucking mouth”
— Pop Base (@PopBase) March 28, 2022
![]()