பலதும் பத்தும்

ரஷ்ய பணக்காரர்களுக்கு செக்..!…. சுவிஸ் வங்கி.

உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல், நடத்திக் கொண்டு தான் இருக்கிறது. இன் நிலையில் ரஷ்யா மீது உலக நாடுகள் விதித்துள்ள தடைகள் ஒருபோதும் நீங்காது. இதனால் ரஷ்யா தொடர்ந்து சர்வதேச சந்தையில் இருந்து ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.இந்நிலையில் உலக நாடுகள் ரஷ்ய அரசு சொத்துக்களையும், ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை வேக வேகமாகக் கைப்பற்றி வரும் நிலையில், தற்போது சுவிஸ் வங்கியில் ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள பணம் குறித்துச் சுவிஸ் வங்கி தகவல்களை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கிகள் எப்போதும் வாடிக்கையாளர்களின் விபரம் மற்றும் பணத்தின் அளவை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்கும். ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால் சுவிஸ் நியூட்டரல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன் மூலம் சுவிஸ் வங்கி அமைப்பு ரஷ்யர்களின் பணத்தின் இருப்பு அளவை வெளியிட்டுள்ளது.

சுவிஸ் பேங்கர்ஸ் அசோசியேஷன் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் ரஷ்யாவின் ஆலிகர்சஸ் (Oligarchs) மற்றும் பணக்காரர்கள் சுவிஸ் நாட்டு வங்கிகளில் 150 முதல் 200 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ் வைத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்க டாலர் மதிப்பில் 160 முதல் 214 பில்லியன் டாலராகும். சுவிட்சர்லாந்தில் டெபாசிட் செய்யப்பட்ட ரஷ்ய பணக்காரர்களின் பணத்தின் மீது தடை விதிக்குமாறு சுவிட்சர்லாந்தின் ஜனநாயகக் கட்சியின் இணைத் தலைவரான மட்டீயா மேயர் கோரிக்கை விடுத்துள்ளார். சுவிஸ் வங்கியில் இருக்கும் பெரும் பகுதி பணம் ரஷ்ய அரசுக்கு நெருக்கமானவர்களின் பணம் எனவும் மட்டீயா மேயர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.