அரசியல் வாரிசுடன் வெளிநாடு சுற்றுலா சென்ற பாலாவின் மனைவி… வெளியான பகீர் தகவல்!
இயக்குநர் பாலாவின் மனைவி முத்துமலர் கடந்த சில ஆண்டுகளாக முன்னணி அரசியல் தலைவர் மகனுடன் நெருக்கமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாலாவும் அவரது மனைவி முத்துமலரும் கடந்த மார்ச் 5ஆம் தேதி சட்டப்படி விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து பெறுவதே சிறந்தது என இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.
இந்நிலையில் விவாகரத்துக்கான காரணம் குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். பாலா ஒரு மனநோயாளி என்றும் அவரது இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களை வதைப்பவர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
ஆரம்பத்தில் பாலாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் குடும்பத்தினர் வற்புறுத்தலால்தான் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். பாலா தனது மனைவி மீது அன்பாக இல்லை என்றும் பல கொடுமைகளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பல நாட்கள் வீட்டிற்கு செல்லாமல் அலுவலகத்திலேயே படுத்து தூங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால்தான் பாலாவின் மனைவி முத்துமலர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தடம் மாறிச் சென்றதாகவும் கூறியுள்ளார். அதாவது இயக்குநர் பாலாவின் மனைவி முத்துமலர் கல்லூரியில் படிக்கும் போதே அதிமுகவைச் சேர்ந்த அரசியல் பிரமுகரின் மகனுடன் நட்பாக பழகியதாகவும் பின்னர் காதலாக மாறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த அரசியல் தலைவரின் மகனுடன் முத்துமலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றதாகவும் வெளியான தகவல் குறித்தும் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அப்போது அதிமுக ஆளும்கட்சியாக இருந்ததால் பாலாவால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியவில்லை என்றும் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
இதனால் முத்துமலரை பிரிந்து வாழ பாலா முடிவு செய்ததாகவும் முத்துமலரும் பாலாவுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இருவருமே ஒருவர் மீது ஒருவர் வெறுப்புடன் வாழ்ந்து வந்ததாகவும், விவாகரத்து வேண்டும் என்பதில் இருவருமே தீவிரமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
![]()