கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!…. பகுதி 14 …. மௌனஅவதானி.

சுற்றுலாப் பயணிகளாக விடுதிகளில் தங்கி நிற்கும் ஒற்றர்கள் இயல்பான சுற்றுலாப்பயணியாக தம்மை வெளிப்படுத்தி நிற்பார்கள்.

ஒரு இலக்கை நோக்கி நிற்கும் ஒற்றர் குழுமம் தாங்கள் இலக்கு வைத்துள்ள ஒரு விடயத்திற்காகவோ அல்லது முக்கியத்துவம் உள்ள நபருக்காகவோ தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.சில வேளைகளில் தொடர்ச்சியான தோல்விகளைத் தழுவுவார்கள், நிறைய செலவுகளும் ஏற்படும்.

இன்றைய உலக நாடுகள் தம்மில் யார் வல்லவர் என்பதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன். உலக தலைவர்களின் சந்திப்புகளும் அவர்கள் கூட்டாக விடும் அறிக்கைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க ஒவ்வொரு நாடுகளும் நட்பு நாடுகளுக்கே குழிபறிப்பு வேலைகளையும் செய்து கெனாண்டுதான் இருக்கின்றன.

ஒரு சாரசரி மனிதன் தனது நாளாந்த வாழ்க்கையின் தேவைகளை ஈடுகட்டுவதற்காகவும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காவும் சதா இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலை அவனுக்கு உண்டு.

இந்த நிலையில் ஒரு நாட்டுக்குள் புகுந்து அந்த நாட்டின் அனைத்து கட்டுமானங்களையும் சிதைக்கும் இன்னொரு நாட்டின் உளவு நிறுவன ஒற்றர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஒரு போதும் அவன் கற்பனை செய்ய மாட்டான்.

ஆனால் ஒரு பொதுமகனை ஒற்றர்கள் மிக இலகுவாக பயன்படுத்திவிடுவார்கள்.

புத்திஜீவிகள் தமது அறிதலினாலும் அதிகளவு வாசிப்பினாலும், வாசிப்பினால் எற்பட்ட சிந்தனையினாலும் தனது நாட்டுக்குள் ஒற்றர்களின் ஊடுருவல் ஏற்பட்டிருக்கலாம்,இனி ஏற்படலாம் என ஏதோ ஒரு சிந்தனைப் பொறி ஏற்பட்டாலும் தொடர்ந்து அது நோக்கிய பயணத்தை அவர்கள் மேற்கொள்ளமாட்டார்கள்.

ஒற்றர் வேலைக்கும் உளவு நிறுவனங்களின் ஊடுருவலுக்கும் சாதக பாதக நிலைகளைத் தோற்றுவிப்பது அந்தந்த நாட்டு மக்களின் குணவியல்புகளும் பண்பாடுகளுமே.

சில நாடுகளிலுள்ள மக்களின் மனநிலை உளவு நிறுவனங்களின் வேலைகளை சுலபமாக்கிவிடும்.ஆனால் இன்னும் சில நாட்டுமக்களின் தேசப்பற்று உளவு நிறுவனங்களின் ஒற்றர் வேலைகளுக்கு தடையாக இருக்கும்.

எனவே உளவு நிறுவனங்கள் முதலில் மக்கள் மனங்களை சல்லடை போட்டு பகிர்ந்து பகிர்ந்து அறிவார்கள்.

மனிதர்களுடைய பலம் பலவீனம் இரண்டையும் அவர்கள் தமக்குச் சாதகமாக பயன்படுத்துவார்கள்.

சுற்றுலாப்பயணிகளாக வரும் ஒற்றர்கள் பல்வேறு விருப்புத்தன்மை னெகாண்டவர்களாக இருக்கும் விதத்தில் அவர்களை அதற்கான பயிற்சிகளைக் கொடுத்து தயார்படுத்தி வைத்திருப்பார்கள்.

சுற்றுலாப் பயணி கொண்டுள்ள ஒன்றின்மீதான நாட்டத்தை சுதேச விடுதிகளின் முகாமையாளர்களோ அல்லது பணியாளர்களோ தமது விருப்பம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் தம்மை வெளிப்படுத்தி நிற்பார்கள்.

தம்மை வெளிப்படுத்தி நிற்கும் சுற்றுலாப்பயணியை அவரின் தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்கும் எண்ணத்தில் அவரை அணுகும் விடுதியாளர்களின் பலம் பலவீனம் இரண்டையும் அறிந்து கொள்ளும் உன்னிப்பான அவதானிப்பு ஒற்றர்களுக்கு இருந்த போதும் தன்னை விடுதியாளன் கூர்ந்து கவனிக்கிறான் என்பதை காட்டிக் கொள்ளாது நடந்து கொள்வதும் எதுவாக இருந்தாலும்’அதீதம்’ என்பதை எச்செய்கையிலோ உடல் மொழியிலோ வெளிப்படுத்தாத இயல்பு நிலையைக் கடைப்பிடிப்பார்கள்.

இக்கட்டுரையின் முன்னைய பகுதிகளில் குறிப்பிட்டது போல சுற்றுலாப்பயணிகளாக வரும் ஒற்றர்கள் மூன்றுவிதமாக தமக்குத் தேவையானவர்களை அணுகுவார்கள்.

பெண்,பொருள், பணம் என்பவற்றில் தேவையான இரகசியம் ஒன்றைப் பெறுவதற்காக அவரவர் பலவீனம் பலம் அறிந்து பயன்படுத்துவார்கள்.

விடுதிக்கு வந்து போகும் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்நசர்களையோ அதிகாரிகளையோ விடுதி முகாமையாளனரிடமிருந்தோ அல்லது சாதரண பணியாளரிடமிருந்தோ அறிந்து கொள்வதற்காக பரிசுப் பொருட்களைக்கூட பரிசளிப்பார்கள்.

தாங்கள் அறிந்து கொள்ளவிருக்கும் இரகசியத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்து இந்தப் பரிசுப் பொருள் அமையும்.

உதாரணமாக மிகவும் விலையுயர்ந்த ஒரு கைக்கடிகாரத்தை கோடீஸ்வரனாக வேசம் போட்டிருக்கும் ஒற்றன் விடுதி முகாமையாளனுக்கோ அல்லது சாதாரணப் பணியாளனுக்கோ வழங்குவான்.

இது காரணத்தோடயே அமையும்.இக்காரணம் என்பது ஒரு சுற்றுலாப் பயணியாக வந்த தன்னை சிறப்பாக கவனித்தமைக்காகவும் விடுதியின் நேர்த்தியான நிர்வாகத்திற்கு கொடுத்ததாகவும் அப்பரிசுப் பொருளைக் கொடுத்ததாக அவன் சொல்வான்.

தான் நோக்கி வந்த இலக்கை அடைவதில் சுற்றுலாப் பயணி வேசமிட்டு வந்த ஒற்றன் உடனடியாக தனது நோக்கத்தை நோக்கி துரிதகதியில் செயல்படமாட்டான்.

கடலில் மீன்களைப் பிடிப்பதற்காக பெரும் வலையை வீசியது போல தனக்கத் தேவையான தகவல்களைத் தரக்கூடியவர்களுக்கு பரிசுப் பொருட்களாகவோ பெண்ணாகவோ பணமாகவோ அன்பளிப்புச் செய்வான்.

இதனால் விடுதியில் உள்ள முகாமையாளரோ அல்லது முக்கியமான பணியாளனோ அந்த வலைக்குள் அகப்பட்டு சுதேச ஒற்றர்களாக மாறிவிடுவார்கள்.

ஒற்றன் மறுமுறை சுற்றுலாப் பயணியாக வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றவிடுவான்.

விடுதியின் முகாமையாளருடனோ அல்லது முக்கிய பணியாளனுடனோ ஒற்றன் தொடர்பில் இருப்பான்.

ஒற்றனுக்குத் தேவையான அமைச்சர்களை அதிகாரிகளை தனது விடுதிக்கு வரவழைப்பதிலும் வருகை தந்தவர்களை அதீதமான கவனத்துடன் கவனிப்பான்.

தன் மீதான நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கும் சுதேச ஒற்றன்.அதிகாரிகள் வருகை பற்றி இரகசியமாக தகவலைக் கொடுக்க சுறறுலாப் பயணியாக மீண்டும் ஒற்றன் அல்லது ஒற்றர்கள் வருவார்கள்.

இன்றைய நவீன கணிணி யுகத்தினால் இரகசியங்கள் எதுவாக இருந்தாலும் அவை எவருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு கடத்துவது இலகுவானதே.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *