சிங்கப்பூரில் சிலகாலம்…. 41….. ஏலையா க.முருகதாசன்.

யோகமலர் வேகமாக கதவைத் திறந்து பார்த்தாள்.யாரையும் காணவில்லை.
கதவு நிலையடியில் நின்ற வலது புறமாகவும் இடது புறமாகவும் பார்த்ததுதான் தாமதம் „யோகி ஏ பிறிற்றி பிறைட் லேடி „ என்று சத்தமாக அதே நேரம் மிக மகிழ்ச்சியாக யோகமலரை கட்டிப்பிடித்தபடியே அப்படியே மெதுவாக தள்ளியபடியே ஜிஇ பேர்சனல் மனேஜர் ரான் உள்ளே வர அவரைத் தொடர்ந்து ரானின் கணவர் வந்தார்.
அவரின் கையில் பலவிதமான பூக்களாலான பூக்கொத்து இருந்தது.எதிர்பாராத விதமாக ரானினதும் அவரது கணவரினதும் வருகையினால் வியப்பு ஒருபுறமும் மகிழ்ச்சி ஒருபுறமுமாக நாங்களிருவரும் இருக்க, இன்னும் ஒருபடி மேலான மகிழ்ச்சியாக அகமட்டும் அவரின் மனைவியும் உள்ளே வந்தார்கள்.அகமட்டின் மனைவியின் கையில் அழகிய ஓர்க்கிட் பூக்கள் அச்சடிக்கபட்ட தாளால் சுற்றிய ஒரு ஓர்கிட் பூச்செடி ச்சாடி இருந்தது.
அந்த ஒரு சில நிமிடங்களுக்குள் அந்த இடம் கலகலப்பாக மாறியது.அகமட் என்னைக் கட்டி அணைத்து தோளில் தட்டிக் கொடு’ கவ் ஆர் யூ,எவிரிதிங்ஸ் இஸ் ஓகே, ஆர் யூ ஓகே..விஸ் யூ ஏ ஹப்பி மறீஜ் லைப் அண்ட் பெஸ்ட் விசஸ்’ என்றவர் கைலாகும் தந்தார்.
அகமட்டின் மனைவி தமிழ் இஸ்லாமியப் பெண் என்பதால் தமிழில் „மாப்பி;ளைக்கு திருமண வாழ்த்துக்கள்’ என்றார்.’ நன்றி’ என்று தமிழில் பதில் சொன்னன்.
தன் அணைப்பில் இருந்து யோகமலரை விடுவித்த ரான் எனக்கருகில் வந்து யோகமலரிடம் „கவ் ரூ சேய் இன் ரமில் பிறைட்குறூம் „ என்று கேட்க அகமட்டின் மனைவி „மாப்பிளை’ என்று சொல்ல,என்னை அன்புடன் கட்டிப்பிடித்து „ மாபிழை விஸ் யூ ஏ கப்பி மறீஜ் லைப் „ என்றவர் அப்பொழுதுதான் இராஜகுமாரியைக் கண்டிருக்கிறார் போல „கூ இஸ் திஸ் பியூட்டிபுல் கேர்ள்’ என்றவர், „தேர்ட்’ என்று என் காதில் மட்டுமே கேட்கத்தக்கதாகச் சொல்லிவிட்டுப் பலமாகச் சிரித்தார்.
ரானிடம் ஒரு பண்பு இருந்தது.வேலை நேரத்தில் தனது பணியில் மிகவும் கண்டிப்பாகவும் நேர்மையாகவும் இருப்பார்.கன்ரீனில்கூட எங்களைக் கண்டாலும் கவனியாத மாதிரித்தான் இருப்பார்.
ஜஇ பக்ரரியின் முன் கேற்றுக்கு அங்கால் அவர் ஒரு சாதாரண மனுசி.அவரா இவர் என்று வியப்புத்தருமளவிற்கு மிகவும் இயல்பாக நடந்து கொள்வார்.அந்த நேரங்களில் நகைச்சுவையாக கதைப்பது மட்டுமல்ல பலமாகவும் சிரிப்பார்.
அந்த வியத்தகு மகிழ்ச்சியான நிமிடங்களின் பூரிப்பில் ரானின் கணவரும் என்னையும் யோகமலரையும் ஒன்றாக கட்டி அணைத்து வாழ்த்துச் சொன்னவர்
மணக்கோலத்திலிருந்த யோகமலரைப் பார்த்துவிட்டு என்னிடம் „யூ ஆர் ஏ லக்கிப் பேர்சன் யூ கொட் ஏ ஏன்ஜல் „ என்று அவளின் அழகைப் பாராட்டினார்.
ரானும் அவரின் கணவருமாக இணைஞ்சு பூக்கொத்தையும் ஒரு அழகான என்வலப்பையும் தந்தனர்.அதைப் போல அகமட்டும் அவரின் மனைவியும் இணைஞ்சு ஓர்க்கிட் பூச்செடிச் சாடியுடன் ஒரு என்வலப்பையும் தந்தனர்.
ரானும் அவரின் கணவரும், அகமட்டும் அவரின் மனைவியும் திடீரென்று வந்து எங்களைச் சந்தோசப்படுத்தியதால் இன்றைக்கு யோகமலருக்கு தாலி கட்டுவது எப்படித் தெரியுமென்று கேட்க வேண்டுமென்று எங்களிருவருக்குமே மனம் அங்கலாதிப்பட்டுக் கொண்டிருந்ததால், யோகமலரே இன்றைக்கு இப்படி ஒரு பங்சன் நடக்குமென்று ரானையும் அகமட்டையும் பார்த்துக் கேட்க, நாங்கள் ஊகித்து இங்கு வரவில்லை யோகமலரின் இரண்டு அண்ணாக்களும் ரெலிபோனில் எங்களிடம் சொல்லி, இதில் பங்கேற்று ஆசீர்வதிக்கச் சொன்னார்கள் என்று அகமட் சொல்ல யோகமலரின் தமையன்மாருக்கு மனசால் நான் நன்றி சொன்னேன்.
ஆரவாரமான சூழ்நிலையிலிருந்து நாங்களனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிடத் தொடங்கினோம்.யோகமலருக்கு வலது புறத்தில் ரானிருந்தார்.நான் இடது புறத்திலிருந்தேன்.எனக்கு இடது புறத்தில் இராஜகுமாரி இருந்தாள்.
சாப்பாட்டு மேசை நீள்சதுர வடிவிலிருந்ததால் எதிர்ப்பக்கத்தில் அகமட்டும் அவரின் மனைவியும் ரானின் கணவரும் உட்கார்ந்திருந்தனர்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது யோகமலருக்கு மட்டுமே கேட்கத்தக்கதாக அவளின் காதருகில் ஏதோ சொல்வதையும்,அடிக்கடி இராஜகுமாரியைப் பார்த்துக் கொண்டே சொல்வதையும் கவனிச்ச நான் எல்லாரும் போனதன் பின் ரான் காதில் என்ன சொன்னவர் என்று கேட்ட போது „நீங்க கல்யாணம் செய்தவர்னு இராஜகுமாரிக்கு தெரியுமான்னு கேட்டாருங்க, நான் தெரியாதுன்னு சொன்னேங்க’ என்றார்.
தாங்கள் அதிகநேரம் எங்களுடன் இருக்கக்கூடாது என்பதை நாகரீகமாக உணர்ந்த அவர்கள் இரவு எட்டு மணிக்கு எமக்கு இனிமையான முதலரவாகட்டும் என்று சொல்லிவிட்டுச் செல்ல,அவர்கள் போனதன்பின்,இராஜகுமாரியும் நானும் போயிட்டு வாறன், இனி உங்களை உங்கடை வீட்டிலை வந்துதான் சந்திப்பன் என்று சொல்லி விடைபெற்றுச் சென்றாள்.
எனக்கும் யோகமலருக்கும் உடம்பில் அலுப்பு இருந்தாலும், இனி இந்த இரவு எமதிருவருக்கும் இனிமையான இரவாக இருக்கப் போகுது என்பதை நினைச்சு மகிழ்ச்சியாகவிருந்தது.
இன்று அதிகாலை எனது பூன்றேறைவ்வில் உள்ள எனது வீட்டைவிட்டு வெளிNறி யோகமலருடன் அவளுடைய அண்ணனமார்; அண்ணிமாரைச் சந்தித்தது,ஒன்றாக காலைச் சாப்பாடு சாப்பிட்டது, பிறகு அங்கிருந்து நானும் யோகமலரும் ராக்சியில் சாய்ச்சி என்ற இடத்தில் உள்ள நாமிருவரும் வாழப்போகும் வீட்டுக்குப் போனது,
அங்கு இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணைச் சந்திச்சது, பிறகு கொட்டலுக்கு வந்தது, அங்கும் அந்த கொட்டலில் வேலை செய்து கொண்டிருந்த சங்கானையைச் சேர்ந்த இலங்கைப் பெண்ணைச் சந்திச்சது, அவள் எங்கள் மீது அதீத அக்கறை எடுத்து யோகமலருக்கு தாலி கட்டும் சடங்கை முன்னின்று நடத்தியது, திடீரென்று ரானும் அவரின் கணவரும், அகமட்டும் அவரின் மனைவியும் எங்களை ஆசீர்வதிக்க வந்தது என எல்லாவற்றையும் மனசில் அசை போட்டபடி சோபாவில் உட்கார்ந்திருந்தன்.
சாப்பாட்டு மேசையிலிருந்த மிகுதிச் சாப்பாடுகளையும்,கோப்பைகளையும் சாப்பாடுகள் கொண்டு வந்த வண்டிலில் வைச்சுவிட்டு என்னருகில் வந்து உட்கார்ந்த யோகமலர் „ ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க, அப்பொ தொடக்கம் பார்த்திட்டே இருக்கேன் உங்க முகமே சரியில்லீங்க, நீங்க தவறு விடுறதா யோசிக்காதீங்க, அக்காவுக்கு பதிலா இங்க உங்களுக்கு நானிருங்கேங்க, கோப்பி குடிக்கப் போறீங்களா „ என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே வீட்டு மணியடிக்க யோகமலர் போய் கதவைத் திறந்தாள்.
இரவுச் சாப்பாடு கொண்டு வந்த அதே பெண்கள் மிகுதிச் சாப்பாடுகளையும் கோப்பைகளையும் எடுத்துக் கொண்டு போகவென்று வந்திருந்தார்கள்.
அவர்களில் ஒருத்தியின் கையில் கண்ணாடி யொக் இருந்தது.அதற்குள் பாலிருப்பதும் அந்தப் பால் மெல்லிய மஞ்சள் நிறத்திலிருந்தது.
யோகமலரின் கையில் பால் யொக்கைக் கொடுத்துக் கொண்டே இந்தப் பாலில் குங்குப்பூவும் வணிலாவும் போட்டுக் கொண்டு வந்திருக்கிறம், இரவு நீங்கள் இரண்டு பேரும் குடிப்பதற்கு என்று சொல்லிக் குடுத்தவள், உடனடியாகவே அவளும் மற்றைய பணிப் பெண்ணுமாகச் சேர்ந்து அறையை விட்டு வெளியே போகும் போது „விஸ் யூ ஏ ஹப்பி மறீட் லைப் அண்ட் சுவீட் பெஸ்ட்n நைற் „ என்று வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
கையிலே பால் யொக்கை வைச்சிருந்த யோகமலர், „கோப்பி வேண்டாம்ங்க பாலையே குடிப்பம்ங்க உங்களுக்கு ஓகேதானே, நீங்க கோப்பி குடிக்கப் போறீங்களா’ என்று கேட்க „ வேண்டாம் பாலையே குடிப்பம் „ என்று சொல்லிக் கொண்டே படுக்கையறைக்கு போவதற்காக கோல் லைட்டுகளை அணைச்சுவிட்டு வந்து யோகமலரை அணைத்தபடி படுக்கையறைக்குள் கூட்டிக் கொண்டு போய்க் கதவைச் சாத்தினன்.
அறைக்குள் படுக்கைக்கு இரு பக்கத்திலும் படுக்கை விளக்குகள் இருந்தன.அவற்றின் வெளிச்சத்தை தேவைக்கேற்ப கூட்டியும் குறைக்கவும் முடியும்.
„என்னங்க றூம் லைட்ஸை அணைச்சிட்டு பெட்லம்பை டிம் வெளிச்சத்தில விடுறீங்களா, அப்படியே இங்க பார்க்காம இருங்க சாறியை களஞ்சிட்டு நைற்றியை போட்டுக்கணும், நீங்களும் நைற் றெஸை போடுங்க’ என்று சொல்ல நானும்
கைலியை உடுத்திக் கொண்டு சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டன்,கட்டிலில் தலைகணியைச் சாத்திசரிஞ்சு நான் உட்கார்ந்திருக்க,வேகமாக உடையை மாற்றிய யோகமலர் கட்டிலில் என்னருகில் உட்கார்ந்து நான் தலைகணியை வைச்சிருப்பது போலவைச்சு சரிஞ்சு உட்கார்ந்தவள், தாலிக் கொடியை மெதுவாக கழட்டி அவளருகில் உள்ள படுக்கை விளக்கு மேசையில் வைச்சவள்’ பால் குடிப்போமா „ என்று கேட்டுக் கொண்டே அந்தச்சிறிய மேசையில் வச்சிருந்த பாலை உயரமான அழகான கோப்பையில் வார்த்து எனக்கும் தந்து, தானும் குடிச்சாள்.
பாலுக்குள் குங்குமப்பூ வனிலா மட்டுமல்ல சிறுசிறு துண்டுகளாக வெட்டிய பேரீச்சம்பழமும் போட்டு தேனும் கலந்திருப்பது அதைக் குடிக்கும் போது தெரிஞ்சது.
„ அவை பாலுக்குள் தனிய குங்கமப்பூவும் வனிலாவும் போட்டதாகத்தானே சொன்னாங்க, ஆனால் குடிக்கேக்கைதான் தெரியுது அதற்குள்ளை பேரீச்சம்பழமும் தேனும் சேர்த்தது’ என்று நான் சொல்ல, „அவங்க பாதாம்பருப்பும் சேர்த்திருப்பாங்களோ தெரியாதுங்க’ என்று யோகமலர் சொல்ல,’ அதென்றால் கடிபடுமே’ என்றன்.’பாதாம் பால் கலந்திருப்பாங்க’ என்றாள்.
„எல்லாம் உடம்பிலை கீற்றைக் கொண்டு வாறவையாக இருக்கு, ஆனால் எங்கள் இரண்டு பேருக்கும் கீற் தேவைதானே’ என்று நான் பூடகமாகச் சொல்ல, அதன் அர்த்தத்தை விளங்கிக் கொண்ட யோகமலருக்கு முகமெல்லாம் சிவக்க வெட்கத்துடன் என் நெஞ்சில படுத்தவள், „ஏனுங்க சேர்ட் போட்டீங்க „என்றவள் சேர்ட் பட்டன்களை கழட்ட,நான் சட்டையைக் கழட்டி அந்தச் சிறு மேசையில் எட்டி வைக்க, மீண்டும் எனது நெஞ்சில் தலை வைச்சப்படுத்தவளின் இதயம் படபட வென அடிச்சதை என் நெஞ்சு உணர்ந்தது.
„லைட்டை மழுசா அணைக்கவா’ என்ற எனக்கு,’அது உங்க விருப்பம் „ என அவள் சொல்ல, இருட்டிலும் உருவம் தெரியும் வெளிச்சத்தில் படுக்கை விளக்கின் வெளிச்சத்தைக் குறைச்சு விட்டன்.
அவளுக்கு இது முதலிரவு…..ஆனால் எனக்கு….
அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு தூக்கத்துக்கும் முழிப்புக்குமிடையில் நான் படுத்திருக்க, „ எழுப்புங்க, பிறஸ் பண்ணிட்டு இந்த முட்டைக் கோப்பியைக் குடிச்சிட்டு அப்புறமாத் தூங்குங்க என்ற எனது முதுகை வருடிக் கொண்டே கேட்ட யோகமலரைப் பார்த்தேன், காலையில் எழுந்து தலைகுளிச்சு கியர்றையர் பிடிச்சு தலைமயிரை ஒன்றாகச் சேர்த்து நடுவில் அகலக் கிளிப் போட்டபடி கட்டிலில்; இருந்தவள், படுக்கையில் விரிச்சிருந்த பெட்சீட்டை பார்த்தவளின் முகம் வெட்கத்தால் சிவக்க வேகமாக அவள் பார்த்த பகுதியை பெட்சீட்டினை இழுத்து மறைக்க’ என்ன’ என்று நான் கேட்க ஒன்னுமில்லீங்க…ஒன்னுமில்லீங்க….நீங்க எழும்பிப் போய் பிறஸ் பண்ணுங்க…இங்க பார்க்காதீங்க…ஆ…பெட்சீட்ஸ் கசங்கியிருக்குங்க அதை டேற்றி குளோத் கூடைக்குள்ள போடனும் „ என்று
அவசரமாக பெட்சீட்டை இரண்டு கைகளாலும் அள்ள, ஏன் இப்படி பரபரக்கிறாள் என நான் பார்க்க அவளின் கைகளுக்கடையில் பெட்சீட்டில் இரத்தத் துளிகள் இருப்பதைக் கண்ட நான் பார்த்தும் பார்க்காதது போல கட்டிலை விட்டு இறங்க’ ஐயோ பார்த்தீட்டீங்களா….ஏனுங்க பார்த்தீங்க எனக்கு வெட்கமாயிருக்கு…’ என்று அவள் சிணுங்க,’நான் எதையுமே பார்க்கேலை’ என்று சொல்ல, „பொய் சொல்லாதீங்க, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற ஆள் நீங்க, உங்களப் பற்றி தெரியாத எனக்கு போங்க போய் பிறஸ் பண்ணிட்டு முட்டைக் கோப்பியைக் குடிங்க „ என்றவள் தலையைக் குனிஞ்சபடி பெட்சீட்டை அள்ளி ஊத்தை உடுப்புக் கூடைக்குள் போட்டாள்…பல்லு மினுக்கிப் போட்டு வந்து கட்டிலுக்குப் பக்கத்தில் சிறய மேசையில் வைச்சிருந்த முட்டைக் கோப்பியை எடுத்துக் கட்டிலில் தலைகணியை நிமிர்த்தி வைச்சு சரிஞ்சு இருந்து குடிச்சுக் கொண்டிருக்க,இன்னொரு கோப்பையில் தனக்கான முட்டைக் கோப்பியுடன் வந்து கொண்டிருந்த யோகமலர் என்னை கண்ணை உயர்த்தி ஒருமுறை பார்த்தவள்,வெட்கத்துடன் கட்டிலில் உட்கார்ந்து குடிச்சவளை என்னருகில் இழுத்து வைச்சுக் கொள்ள கடைக்கண்ணால் என்னைப் பார்த்தவள்…நாணிப் போய் நின்றாள்.அவள் என்னைக் காதலிக்கும் போது இருந்த பூரிப்பைவிட அதிகளவு பூரிப்பு முகத்தில் தெரிஞ்சது.
முட்டைக் கோப்பியில் மெலிதாக பிறண்டியின் வாசமும் முட்டைக் கோப்பியைக் குடிச்சுக் கொண்டிருக்கும் போதே ஒரு உற்சாகமும் வர „ பிறண்டி விட்டா முட்டைக் கோப்பி அடிச்சனீங்கள், முட்டையும் இருந்துதா’ எனக் கேட்க பிறண்டி பிறிட்ஜ்ஜிலை இருந்ததுங்க, முட்டை கோப்பியெல்லாம் இருந்துது,அதை நைட்டே பார்த்து வைச்சிருந்தேனுங்க, காலைல எழுந்ததும் குளிச்சிட்டு உங்களுக்கும் எனக்கும் முட்டைக் கோப்பி அடிச்சேனுங்க „ என்று சொல்லும் போதே கொட்டலிலேயே முட்டைக் கோப்பி அடிச்சுக் குடிக்கிற வசதியிருக்கின்றதே என நினைச்ச நான்,’ நீங்களும் பிறண்டி விட்டா குடிக்கிறீங்க’என்று கேட்டு முடிக்க முந்தி „ போங்க …இல்லீங்க…நான் இதெல்லாம் குடிக்கமாட்டன்,அந்தப் பழக்கம் எனக்கில்லைங்க உங்களுக்கு விருப்பமில்லையென்றால் நாளைக்கு பிறண்டி விடாமலே முட்டைக் கோப்பி அடிச்சுத் தாரேனுங்க’என்றவளுக்கு,’ பரவாயில்லை நாளைக்கும் கொஞ்சமாக விட்டுத்தாங்க’ என்று சொன்ன நான் அவளின் காச்சங்கிலி போட்டிருந்த கால்பகுதியைப் பார்த்தேன்,உரசிய தழும்பு போல் தெரியவே,அதைப் பார்ப்பதைக் கவனித்த யோகமலர் „இன்ன ராத்திரிக்கு அதை கழட்டி வைக்கிறேனுங்க’ என்றவள் முகம் சிவக்க என் தோள் மீது சாய்ஞ்சு கொண்டே முட்டைக் கோப்பியை இரசித்து இரசித்து குடிச்சுக் கொண்டிருந்தாள்.
இருவரும் குடிச்சு முடிச்சதும், கோப்பைகளை வாங்கி கட்டிலருகில் இருந்த சிறிய மேசையில் வைச்சுவிட்டு கட்டிலில் உட்கார ரெலிபோன் மணி அடிக்க, யோகமலர் ரெலிபோனை எடுக்க பல குரல்கள் சேர்ந்து „திருமண நல்வாழ்த்துக்கள் என்றும் விஸ் யூ ஏ ஹப்பி மறீஜ் லைப் „ என்றும் கேட்டன,’யோகி ஸ்பீக்கரைப் போடு மாப்பிளையும் கேட்கட்டும்’ என்று யாரோ ஒரு பெண் சொல்வது கேட்க,ஜோகூர்பாருவில இருந்து அப்பா அம்மா அண்ணாக்கள் அண்ணிமார்
மச்சாள் ஒருத்தி எல்லாரும் வாழ்த்துச் சொல்றாங்க’ என்று யோகமலர் என்னைத் திரும்பிப் பார்த்துச் சொன்னாள்….
தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது……..
(தொடரும்)
![]()