நிகழ்வுகள்

ஓஸ்ரேலியா மெல்பேன் நகரில் நடைபெற்ற “மே 18 தமிழினவழிப்பு நினைவு நிகழ்வுகள்_2021”

வன்னிப் பேரவலத்தின் நினைவுகளை  மே மாதம் 18ம் திகதி புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும், தாயகத்திலும் கடந்த 2009ம் ஆண்டு மேமாதத்தில் நிகழ்ந்த பேரழிவை நினைவுகூரும் 12ம் ஆண்டு நிகழ்வுகள்  எழுச்சியுடனும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றன.

அந்த வகையில் இந்நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (18–05-2021) ஓஸ்ரேலிய மெல்பேண் நகரில் Wantirna, Hungarian Community Centre மண்டபத்தில்  தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவால் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மரணித்துப்போன எம்முறவுகளை நெஞ்சில் நிறுத்தி குரலடங்கிப் போயுள்ள தாயக மக்களின் குரலாகபல நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் திரண்டு வந்துஇந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *