உளவு நிறுவனங்கள்!…. 5 …. ( கட்டுரை ) …. அவதானி.


ஒரு நாட்டை உளவு பார்க்கும் வல்லரசு, அந்த நாட்டினுடைய குறிப்பிட்ட கட்டமைப்பை மட்டுமே குறி வைத்து உளவு பார்ப்பதில்லை.
ஒரு நாட்டினுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முப்படைகளின் கட்டமைப்புகள் மட்டுமே உளவு பார்ப்பவர்களுக்கு முக்கியமல்ல.
உதாரணமாக நாலு கோடி சனத்தொகை கொண்ட ஒரு நாட்டின்,என்னென்ன கட்டமைப்பு அலகுகள் மூலமாக அந்நாட்டு அரசு தனது மக்களை நிர்வகிக்கின்றதோ அத்தனை கட்டமைப்புகளையும் உளவு பார்க்கும் நாடு மிக உன்னிப்பாக கவனிக்கும்.
இந்த கவனித்தல் என்பது,அந்நாட்டு அரசு உட்பட அந்நாட்டின் நிலப்பரப்பு, மக்கள் என அனைத்தையும் தனது பார்வைக்குள் உளவு பார்க்கும் நாடு கொண்டு வந்துவிடும்.
ஒவ்வொரு நாளும் அந்நாட்டின் அனைத்துச் செயல்பாடுகளையும் ஒற்றர்கள் மூலம் தனது நாட்டிலிருந்தே கவனிக்கத் தொடங்கிவிடும்.இன்று விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியினால் நூற்றுக் கணக்காண சட்லைட்டுகள் பூமிக்கு மேலே மிதந்து கொண்டு பூமியில் உள்ள நாடுகளின் செயல்பாடுகளை நோட்டம் விடுவதில் பெரும் வளர்ச்சியடைந் ஒரு நாட்டினுடைய மேற்பரப்பு நிலவரங்களை மட்டுமல்ல அந்நாட்டின் மண் அடுக்குத் தொட்டு அனை ஊடருவிச் சென்று பார்க்கும் தொழில்நுட்பத்தை சட்லைட் விஞ்ஞானம் பெற்றுவிட்டது.
ஒரு நாட்டினுடைய வளங்களே அந்த நாட்டினுடைய காத்திரத்தன்மையை நிலைக்கச் செய்பவனைவையாகும்.
ஒரு நாட்டினுடைய வளங்களாக,அந்த நாட்டினுடைய நிலம், அதன் மண் வகை, மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் கனிம வளங்கள்,நீர்நிலைகள், காடுகள், மிருகங்கள் பறவைகள் என்பனவற்றுடன் அந்நாட்டினுடைய செல்வத்தை
அதிகரிக்கச் செய்கின்ற பொருளாதாரத்தைக் கொடுக்கின்ற விவசாயம், தொழிற்சாலைகள்,பணத்தின் மதிப்பீடு, சேமிப்பின் நிலை, தங்கம், எரிபொருள்கள், கல்வி, மருத்துவம், மருந்துகளை கண்டு பிடித்து தயாரித்தல், ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்கள், பலம்பொருந்தியதும் நுட்பத்தன்மை கொண்டதுமான இராணுவம்,கடற்படை ,விமானப்படை , பலம்பொருந்தியதும் நுட்பத்தன்மை கொண்டதுமான காவல்துறை, தொலைத்தொடர்பு வளம், போக்குவரத்து நிலைப்பாடு, உற்பத்தி செய்வோர், சந்தைப்படுத்துவோர், உற்பத்திப் பொருட்களின் தரம், நோயற்ற மனித வளம் என்பன அடங்குகின்றன.
இக்கட்டமைப்புகள் யாவும் சீரான ஒரு செம்மைப்படுத்தலில் இருக்கும் போதுதான் ஒரு நாடு பலம் பொருந்திய நாடாக இருக்கும்.
இக்கட்டமைப்புகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக ஒற்றர்கள் மூலம் கவனிப்பதும், இக்கட்டமைப்புகளில் ஆங்காங்கே சிறு சிறு துவாரங்களை ஏற்படுத்துவதற்காக அதிருப்தியாளர்களை விமர்சகர்களை கண்டனம் செய்பவர்களை உருவாக்குதல் என்பது வல்லரசு நாடுகளின் குறிக்கோளாகும்.
இதன் மூலம் வலுவிழந்த அரசை ஏற்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வல்லரசுகள் தகுந்த நேரம் பார்த்து குழப்பங்களை ஏற்படுத்தத் தொடங்கும்.
ஒற்றர்களாக நியமிக்கப்பட்டவர்கள் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக குழப்பகாரர்களில் எவர் எவருக்கு எது எது தேவையோ அதனை அவர்களுக்கு வழங்கத் தயங்கமாட்டார்கள்.
இதற்காக கோடிக்கணக்கான பணத்தைச் செலவிடுவார்கள். பணம், பெண் பொருள் என்ற வகைப்படுத்தலில் ஒற்றர்களை கைக்குள் போட்டுக் கொள்வார்கள்.
அரசியல் காத்திரத்தன்மை அற்ற நாடுகளையும்; தேசிய விசுவாசம் அற்ற மக்களைக் கொண்டிருக்கும் பலவீனமான
நாடுகளையும் வெகு சுலபமாக தமது நோக்கத்திற்குள் வல்லரசு நாடுகள் கொண்டுவந்துவிடும்.
பலவீனமான நாடுகளில் பேருந்து சாரதி உட்பட பலர் ஒற்றர்களாக செயல்படும் நிலை தோன்றிவிடும்.
சம்பள உயர்வுப் போராட்டத்தையோ சலுகைக்கான போராட்டத்தையோ காலம் அறிந்து அதனை விஸ்வரூபமெடுக்கச் செய்வதில் ஒற்றர்கள் செயல்படுவார்கள்.
போராட்டத்தை ஆரம்பித்தமைக்கான காரணத்தை பணியாளர்கள் தொழிலாளர்களுக்கு நியாயமாக சொல்வது போல தோற்றப்பட்டாலும் அதற்கான அடிப்படைக்காரணம் ஒற்றர்களுக்காக இயங்கும் போராட்டத்தை தலைமை தாங்குபவர்களுக்கே தெளிவாகத் தெரிந்திருக்கும்.
ஒவ்வொரு போராட்டத்தினாலும் பாதிக்கப்படுபவர்கள் அமைதியாக வாழவிரும்பும் மக்கள்தான்.
போராட்டத்தின் பயனாக அரசு மீது அதிருப்தியும் சீற்றமும் மக்களுக்கு ஏற்பட்டுவிடும்.
அரசு மீதான இத்தகு சீற்றத்தையும்,அதிருப்தியையும் எத்தீர்வுக்கும் வரமுடியாதவாறு வளர்த்துவிடுவதில் உளவு நிறுவனத்தின் ஒற்றர்கள் மிகத் தீவிரமாக இருப்பார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனது இயல்பு சார்ந்த பலம் பலவீனம் இருக்கும்.அதனை, அவனுடன் நுட்பமாக பழகி அவனை அறியாமலே கண்டு கொள்ளும் உளவு நிறுவனம் அதற்கமைய பலவீனத்தைக் கண்டறிந்து அவனுடைய தேவையை பூர்த்தி செய்துவிடும்.
இதனால் இலகுவாக நிறைவுக்கு வர வேண்டிய போராட்டம் மிக இறுக்கமான சூழ்நிலையை நோக்கி நகரத் தொடங்கும்.
இப்போராட்டத்தில் அணிவகுத்து நிற்கும் தொழிலாளிகளுக்கோ பணியாளர்களுக்கோ போராட்டம் ஏன் இறுக்கமான நிலையை எட்டியது என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருப்பார்கள்.
தொடர்ச்சியான போராட்டங்கள் அதனால் ஏற்படும் தீவிரவாதப் போக்கு போன்றவையால் கிளர்ச்சி வடிவைப் போராட்டம் எட்டுகையில் பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்படுதல் தீ வைத்தல் போன்றவை ஏற்படுகின்றன.
இவற்றை போராட்டக்காரர்கள் செய்யாவிட்டாலும், ஒற்றர்கள் சிலரை அதற்காகவே ஏற்பாடு செய்வார்கள். போராட்டக்காரர்களோடு போராட்டக்காரர்களாக கலந்து நிற்கும் இந்த ஒற்றர்களின் கையாட்கள் கலவரங்களைத் தூண்டிவிட அது பெரிய வன்முறையாக வெடித்துவிடும்.
இதனால் அந்த நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை தோன்றிவிடும். இந்த அசாதாரண சூழ்நிலை பொதுமக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கும்.
போராட்டம் கிளர்ச்சி வன்முறையென வளர்ந்து கொண்டு போகையில் மக்களின் அரசுக்கு எதிரான உணர்வுகள் ஒருமித்த வடிவம் பெற அதுவே எதிர்கட்சிகளுக்கு துணைபோக ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும்.எதிர்கட்சிகளை காலம் பார்த்து உளவு நிறுவனங்கள் கையாளத் தொடங்கிவிடும்.
தமது சொல்லைக் கேட்கின்ற பொம்மை அரசை நிறுவுவதற்கு இச்சூழ்நிலை சாதமாக அமைந்துவிடுகின்றது.
ஒரு நாட்டில் ஏற்படுகின்ற தளர்ச்சியான பொருளாதார நிலவரம், மக்களின் அதிருப்தி போன்றவை அந்த நாட்டில் பலவீனமான அரசையே ஏற்படுத்தும்.
வல்லரசு நாட்டின் உளவு நிறுவனங்கள் ஆசியநாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் அரேபிய நாடுகளிலும் மிகச் சுலபமாக தமது உளவு வேலைகள் மூலம் அந்நாட்டு அரசுகளின் உறுதித் தன்மையை நிலைகுலைய வைப்பதற்குக் காரணம் அங்கு நிலவும் வறுமை,பல்லின மக்களின் அரசியல் ஏற்றதாழ்வுகள் முதல் காரணமாகிவிடுகின்றன.
பல்லினம் வாழும் நாடுகளில் நிலவும் இறுக்கமான தேசிய உணர்வற்ற நாட்டு மக்களின் மனப் போக்கினாலும்,சக இனத்தின் சமநிலை உரிமையை ஏற்றுக் கொள்ளாமையும்
உளவு நிறுவனங்களுக்கு சாதகமான அணுகுமுறைக்கு வழிவகுத்துவிடுகின்றன.
தேச விசுவாசமற்ற மக்களும் பணம்,பெண், பொருளுக்கு விலைபோகும் மக்களினாலும் உளவு பார்க்கும் நிறுவனங்களின் வேலைகள்; சுலபமாக்கப்படுகின்றன.
ஏன் ஒரு நாட்டை இன்னொரு நாடு உளவு பார்க்க வேண்டுமென்பதில் பலநோக்கு வணிகம் சம்பந்த விடயங்களும் அடங்கியிருக்கின்றன.
பொருட்களைத் தயாரிக்கும் நாடுகளில் ஆயுதங்களைத் தயாரிக்கும் நாடுகளின் தொடர்ச்சியான தயாரிப்பு என்பது அதன் தேவை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாடும் தமது இராணுவம் காவல்துறைக்கு தேவையான ஆயுதங்களை மட்டுமே தயாரிக்கவில்லை, விற்பனைக்குமாகவே தயாரிக்கப்படுகின்றன.
ஆயுதங்களைத் தயாரிக்காத நாடுகளுக்காகவும், ஆயுதங்களைத் தயாரிப்பினும் நவீன ஆயுதங்களைத் தயாரிக்காத நாடுகளுக்கும் விற்பனை செய்வதற்குமாக ஆயுதங்களைத ; தயாரிப்பதும் விற்பனை செய்வது என்பது தயாரிக்கும் நாட்டுக்கும் வாங்கும் நாட்டுக்கும் இடையில் உள்ள கொடுக்கல் வாங்கல் முறையாகும்.
இதற்கப்பால் தீவிரவாதிகளுக்காகவும்,பயங்கரவாதிகளுக்காகவும்கூட ஆயுதங்களைத் தயாரிக்கிறார்கள்.
ஒவ்வொரு நாடும் சமகாலத்தில் இரண்டுவிதமான ஆட்சிகளை நடத்துகின்றன. தனது மக்களுக்கான ஆட்சி மற்றையது உலகுக்கான ஆட்சி.
உலகுக்கான ஆட்சியில்தான்,ஆயுதத் தயாரிப்புகள் உத்தியோகபூர்வமான விற்பனைக்கல்லாத தயாரிப்புகள் என்ற கட்டமைப்புக்கள் இடம்பெறுகின்றன.
தீவிரவாத – பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுதல் என்பது ஆயுத விற்பனையையும் நோக்கமாகக் கொண்டதே.
இந்த ஆயுத விற்பனையில,; ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நேரடியாக ஈடுபடுவதில்லை.
ஆயுதங்களை பயன்படுத்துவதற்காக வாங்கும் குழுக்களுக்கும் தொழிற்சாலைக்கும் இடையில் ஆயுத விற்பனையில் எவ்வித தொடர்புமே இருக்காது.
சந்தைப்படுத்தும் முகாமையாளர் மூலமாகவே குழுக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பல்லின வாழும் மக்கள் கொண்ட நாட்டின் மக்களுக்கிடையில் ஏற்றதாழ்வு இருக்கின்றதா என்பதைக் கண்காணிக்கும் உளவு ஒற்றர்கள், பேசித் தீர்க்கக்கூடிய பிரச்சினையை தீர்க்க முடியாதவாறு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல சமகால அரசிற்கும் உரிமை மறுப்பைக் கொண்டிருக்கும்
மக்களுக்கும் இடையில் செயல்படுவார்கள்.உதாரண நாடுகளில் இலங்கையும் ஒன்று.கைக்கெட்டிய தூரத்தில் ஐக்கியத்திற்கான சூழ்நிலை இருந்தும், அதைத் தூரமாக்கியவர்கள் உளவு நிறுவனங்களே , இந்தியாவின் உளவு நிறுவனமும் இதற்கு முக்கிய காரண கர்த்தாக்களாவார்கள்.
ஆயுத விற்பனைக்காக இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிக் கொள்வதை கையாளாக கையாளப்படுபவர் பிரச்சினைக்கான தீர்வில் எல்லையை நீட்டிக் கொண்டே போகுதலும்,உரிமை கோரி நிற்கும் குழுக்களுடன் விட்டுக் கொடுப்புடன் தீர்வுக்கான அனைத்துச் சாத்தியத்தையும், அதன் வழிகளையும் நிராகரிக்கின்ற போக்கை அரசு கொண்டிருக்கும் விதமாக ஒற்றர்கள் காயை நகர்த்தத் தொடங்குவார்கள்.
உரிமை கேட்டல், அதனை அடக்குதல் என்பவை இரண்டிற்குமே அயுதம் தேவைப்படும் எல்லையை அவை எட்டும் போது உரிமைப் போரானது தீவிரவாதம் எனவும் பயங்கரவாதம் எனவும் அழைக்கப்பட்டு அடக்கப்படுகின்றது.
அடக்கப்படுதல் என்பது அழிக்கப்படுதலாக வடிவம் பெறும் போது இரு பகுதியினருமே ஆயுதத்தை கையாளத் தொடங்குவதால் ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக ஆயுதங்களைத் தயாரிக்கின்றன.
ஒரு நாட்டின் அமைதியைக் கெடுப்பதன் மூலமே ஆயுத விற்பனை சாத்தியமாகின்றது.அதனை உளவு நிறுவனங்கள் மிகத் தெளிவாக திட்டமிட்டுச் செய்கின்றன.
இந்த அணுகுமுறையானது சமபலமுடைய வல்லரசு நாடுகளில் நடைமுறைப்படுத்துவது என்பது மிக மிக அரிதானதே.
இத்தகு நாடுகள் உளவாளிகளைக் கண்டு கொள்ளல் அல்லது உளவாளிகள் உருவாகாமல் தமது இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தடுத்து விடுகின்றன.
தமது உளவாளிகள் மூலமாக ஒரு நாட்டினுடைய அமைதியைக் குலைத்து, மக்களின் நாளாந்த வாழ்க்கையின் அமைதியைக் குலைத்து அதனால் அரசு மீது மக்களுக்கு சீற்றத்தையும் அதிருப்தியையும் கொள்ளும் நாடுகளாக ஆசிய ஆபிரிக்க நாடுகளே இருந்து வருகின்றன.
ஒரு நாட்டில் வறுமையும் போரும் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் அந்த நாட்டின் அனைத்துக் கட்டமைப்புகளுமே சிதிலமடைந்து சீரழிந்துவிடும்.
இத்தகைய நிலைக்கு உளவு நிறுவனங்களே காரணமாகின்றன.
(தொடரும்)
![]()