கவிதைகள்
பதினொராம் ஆண்டில் பதிக்கின்றாய் அடியை பரவசம் கொண்டு வாழ்த்தியே மகிழ்கிறேன்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
அச்சிலே வந்தாய் அக்கினிக் குஞ்சே
மெச்சினார் பலரும் வியந்துமே யுன்னை
ஆளுமை பாஸ்கரன் அணைத்துமே உன்னை
அனைவரும் விரும்ப ஆக்கினார் நன்றாய்
அச்சிலே இருந்து ஆறுதல் பெற்றாய்
கணனினியில் புகுந்து கலக்கிறாய் இன்று
கணக்கிலா ரசிகர் சுவைக்கிறார் உன்னை
களிப்புடன் நீயும் வளருவாய் நெடுநாள்
ஏட்டிக்கு போட்டியாய் எதுவுமே செய்யாய்
இன்முகம் உன்முகம் ஆக்கியே உள்ளாய்
பன்முகம் காட்டிடும் படைப்புகள் தருகிறாய்
பல்லாண்டு வாளர்ந்து பண்பாடு தமிழை
ஆதவன் வருவான் நீயுமே வருவாய்
சாதனை போதனை அனைத்தையும் தருவாய்
பதினொராம் ஆண்டில் பதிக்கின்றாய் அடியை
பரவசம் கொண்டு வாழ்த்தியே மகிழ்கிறேன்
அக்கினிக் குஞ்சு இணைய இதழில் 2016ல் அமரர் எஸ்.பொ. நினைவு குறுநாவல் போட்டி ஒன்று நடத்தப்பட்டு அதில் நானெழுதிய குறுநாவலுக்கு முதல் பரிசும் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2021லும் இன்றுவரை பரிசுத் தொகை எனக்கு அனுப்பப் படவில்லை. ஒரு அடிப்படை அறம் இல்லாத இணைய இதழ் எத்தணை வருஷங்கள் நிலைத்திருந்து தான் என்ன பிரயோசனம்? என்னுடைய முறைப்பாட்டை அக்கினிக் குஞ்சுக்கு பொருளுதவி செய்யும் நண்பர் யாழ். சுதாகருக்கு மின்னஞ்சலில் தெரிவித்தேன். அவரிடமிருந்து வந்த பதில்:
அன்பு நண்பருக்கு,
நான் எத்தனையோ தடவைகள் அக்கினிக்குஞ்சு நடத்தும் யாழ்.பாஸ்கர் என்பவருடன் கதைத்துப் பார்த்துவிட்டேன். செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தான்.
நான் அதன்பின்னர் அவரது இணையத்தளத்துக்கு எழுதுவதையும் விட்டு விட்டேன்.
தங்களால் ஒரு மனிதரை (?) நான் அடையாளம் கண்டேன்.
கல்கியில் வெளிவந்த சிறுகதை பற்றிய தங்களின் கருத்துக்கு நன்றி. கணையாழி சஞ்சிகையிலும் அவ்வப்போது எழுதி வருகின்றேன்.
நன்றியுடன்,
கே.எஸ்.சுதாகர்.