தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு ! சிறப்பு பேச்சாளராக ஐ.நாவின் முன்னாள் வதிவிட பிரதிநிதி கலந்து கொண்டார்!
இரு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் முதன்மைப் பேச்சாளராக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல். அப்துல் அஸீஸ் ”பெண்களை வலுவூட்டுதல் – பூகோளப் பார்வையும் தேசிய மேம்பாடும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வு ஏ.எல். அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் “பெண்களை வலுவூட்டுதல் – கருத்தாடலுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியினை மனதில் கொள்ளுதல்” எனும் கருப்பொருளிலான சிறப்புக் கலந்துரையாடல் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் (பீடாதிபதி – அறபு மொழி, இஸ்லாமிய கற்கைகள் பீடம்), கலாநிதி எம்.ஐ. சபீனா (முன்னாள் பீடாதிபதி – பிரயோக விஞ்ஞானங்கள் பீடம்), கலாநிதி எம்.எம். பாஸில் (தலைவர் – அரசியல் விஞ்ஞானத் துறை), கலாநிதி அனூசியா சேனாதிராஜா (தலைவர் – சமூக விஞ்ஞானங்கள் துறை) ஆகியோர் பங்குபற்றினர்