நம் வாழ்வு நம் கையில்!… ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

தமிழா தமிழா
ஆண்ட தமிழா
குமரிக் கண்டமதில்
சேர்ந்து செழித்துமே
நீ வாழ்ந்தபோது
உனக்குள் வேற்றுமையும்
வந்ததுண்டோ சொல்!
துண்டு துண்டாய்
பிரிந்திப்போ சென்றதனால்
அவரவர் சுயநலத்திற்காய்
உன்னைக் கூறுபோட்டு
குளர்காய்கிறார் அன்றோ
அவன் காப்பான் இவன் காப்பான்
என்று நீ இருந்தால்
எவனும் நம்மை காக்க மாட்டான்!
ஒருவன் தொப்புள் கொடி
உறவென்று சொல்லி
துடைத்து அழிப்பான்
நம் இனத்தை நிச்சயமாய்
மற்றவனோ நான் வேறு
நீ வேற என்று சொல்லி
நம்மை சேரவிடாமல் செய்து
நாம் செத்தொழிய
வகை செய்து முடித்து வைப்பான்!
யார் யார் எந்நோக்கில்
உள்ளார் எனும் உண்மையினை
கண்டறிந்து நீயும் இணைந்திருக்க
அயராது பாடுபடு
உணராது பிரிந்து நின்றால்
உங்களை பிரித்து வைத்தே
அழித்திடுவார் உண்மை இது
ஒரே இனம் என்று உண்மையை
உணரவிடாது வஞ்சகமாய் தடுத்து
வெவ்வேறு நாடென்று நஞ்சைத்தூவி
அவர் பண்பாடும் நம் பண்பாடும் வேறென
மூளைச் சலவை செய்து
சேராது செய்து தான் வாழவழி பார்ப்பான்
இனமென சேர்ந்திருந்தால்
இனியொரு புது வரலாறு படைப்போம் ![]()
இல்லை வேண்டாமென பிரிந்த நின்றால்
நம்மை அழிக்க யாரும் வேண்டாம்
குலத்தை கெடுக்கவந்த கோடாரிக்காம்பாய்
நம் இனத்தை அழிக்க யாரும் வேண்டாம்
நாமே அழித்தொழிப்போம்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()