கவிதைகள்

முதிர்வு!…. ( கவிதை ) ….. தம்பி நந்தன்.

வார்த்தைகளை இங்கிதமாய் வளைத்து
போட்டு வர்ண்ணிக்க முடியாது
மனதை சன்னதம் ஆட
வைக்கும் வாழ்க்கையின்
கடைசி காலங்கள்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நடுவே புரியும் இறுதி போர்
வாழ்ந்த காலங்கள் முடியபோவதை எண்ணி மனம்
புரியும் போர்தான் சன்னதம்.
முதுமை விழுந்து கூனி குறுகி
குழந்தையாய் மெய் மறந்து
விண்ணகம் வா வா என கூப்பிட
மண்ணகத்தை விட்டு நகர
மறுக்கும் வாழ்க்கை முதுமை.
ஆடி ஓடி அடங்காமல் திரிந்த உடல்
முதுமை கண்டு உடைந்து
மனதால் கரைந்து கோலத்தால்
சிதைந்து
மரணத்துடன் நடத்தும் போர்
முதுமை.
வாழ்ந்து முடிந்தாலும்                                 
பருக பருக திகட்டாத
பதனீர் போல
இன்னும் இன்னும் வாழ துடிப்பதே
முதுமை.
எதையும் ஏற்று போட்டி போடும் மனது
மரணம் ஒன்றை ஏற்க மறுத்து
நடத்தும் யுத்தம் முதுமை
யாராய் இருந்தாலும் இரண்டு கையும் கூப்பி ஏற்க மறுப்பது
முதுமையும் அது தரும் மரணமும்…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *