உளவு நிறுவனங்கள்!… 3…. ( கட்டுரை ) ….. அவதானி.

எல்லா நாடுகளுமே மற்றைய நாடுகளின் சமூக, பொருளாதார, நிர்மாணக் கட்டமைப்புகளை அறிந்து கொள்வதையே உளவு பார்த்தலின் அடித்தளமாகக் கொண்டுள்ளன.
இதற்காக அறிவுஜீவிகள் அடங்கிய குழுக்கள் கட்மைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கட்டமைப்புகளே பல பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டிருக்கும்
அந்தந்த நாடுகளில் அந்தந்த நாட்டிற்குரிய மக்கள் மட்டுமல்ல,அந்நாடுகளில் வாழுகின்ற வெளிநாட்டினரையும் உளவு பார்க்கும் வேலைக்காக அதற்குரியவர்களை சல்லடை போட்டுத் தேடுவது போல தகுதியானவர்களைத் தேடி எடுப்பார்கள்.
தமது உளவு பார்க்கும் வேலைக்கு இவர்கள் பொருத்தமானவர்களா என பல தேர்வுகள் ஊடாகவே அவர்களை அவ்வேலைக்கு அமர்த்துவார்கள்.
இவர்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு பணி சார்ந்தவர்களாக அனுப்பப்படுவார்கள்.
உளவு பார்த்தலுக்கு வெகுசனப் பிரியத்தைக் கொண்ட வலலரசு நாட்டின் உணவகங்கள் ஊடகங்களும்கூட பயன்படுத்தப்படுகின்றன.இவ்வுணவகங்களின்
அதிகாரிகள் பணிசார் நிலையில் அதற்குரியவர்களாகக் வெளிப்படையில் தெரியப்பட்டாலும் அவர்கள் தமது நாட்டுக்காக இரகசியங்களை சேகரிப்பவர்களாகவும் வேலை செய்வார்கள்.
உளவு பார்க்கும் வேலை நேர்மைக்கு முற்றிலும் எதிர்மாறானது என்பது உளவறியும் நிறுவனங்களின் செயல்பாடுகளை அறிந்து கொண்ட பொதுமக்கள் அதிருப்திப்படலாம்.ஆனால் தனது நாட்டின் நிறுவனம் பணி; ரீதியாக இன்னொரு நாட்டில் செயல்படும் வேளையில், அந்த நாட்டின் இரகசியங்களை சேகரிப்பதில் விருப்புடனேயே அவர்கள் செய்வார்கள். தமது நாட்டுக்காக தாம் செய்யும் கடமை என தேசியப் பற்றுடன் அவர்கள் உளவு பார்க்கும் பணியைச் செய்வார்கள்.
அந்தந்த நாட்டு மக்களையோ அல்லது தனது நாட்டு குடிமகனைக் கொண்டோ இன்னொரு நாட்டின் இரகசியங்களை அறிந்து கொள்வது தவறு என்ற வாதம் இப்பணி மீதான கருத்தியலால் வலுவிழந்து விடுகின்றது. ஆனால் அதுவும் ஒரு பணிதான் என்பது வலுப்பெற்று விடுகின்றது.
வெகுஜன ஊடகங்கள் வழியாக விநாடிக்கு விநாடி புதிய புதிய செய்திகளை மனித குலம் அறிந்து கொள்ளுகின்ற வசதியை விஞ்ஞான வளர்ச்சி எமக்கு கொடுத்து இருக்கின்றது அதனால் ஒரு நாட்டின் சமூக, பொருளாதார, நிர்மாண கட்டமைப்புகள் மீதான தாக்கங்கள் அந்த நாட்டிற்குள்ளேயே அந்த நாட்டு மக்களால், அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமையவே ஏற்படுகின்றன என்று சொல்வதற்கில்லை.அவை ஒற்றர்கள் (உளவாளிகள்) மூலமும் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்த உளவுப் பணி இன்றைய உலகில் மட்டுந்தான் இடம் பெற்றிருக்கின்றது என்று எண்ணிவிடுதல் மிகத் தவறாகும்.
ஒற்றர்களை அனுப்பி இன்னொரு நாட்டின் இரகசியங்களை அறிந்து கொள்ளும் பணி மன்னர் காலத்திலிருந்தே தொடர்கின்றது.மன்னர் காலத்து ஒற்றர்கள் வெற்றிகரமாக தமது பணியைச் செய்துமிருக்கிறார்கள், அதே வேளை
பலவாயிரம் ஒற்றர்கள் பிடிபட்டு சிறைத்தண்டனைiயும், மரண தண்டனையையும் பெற்றுமிருக்கிறார்கள்.
ஒற்றர்களை மீட்பதற்காக ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்துமிருக்கின்றது.
இன்னும் சொல்லப் போனால் மனிதகுல ஆரம்ப நிலையான காட்டு வாழ்க்கையின் போதுகூட காடுகளில் குழுக்கள் குழுக்களாக வாழ்ந்த மக்கள் கூட்டங்களும்கூட இன்னொரு குழுக்களின் நடவடிக்கைளை இரகசியமாக அறிந்து கொள்ளும் பணியைச் செய்திருக்கின்றன.
அவை பெரும்பாலும் உணவுக்கான ஒற்றர் பணியாக இருந்திருந்தாலும் அங்கிருந்து ஆரம்பித்ததுதான் இந்த உளவு பார்க்கும் வேலை.
ஒரு நாட்டின் மீதான உளவு பார்க்கும் பணியில் வல்லரசு நாடுகள் தமக்குரிய இலக்கை சுலபமாக அடைவதிலும் பல தடைகள் உண்டு.
தமது நாட்டுக்கு விசுவாசிகளாகவும் தேசிய உணர்வுடன் இருக்கும் ஒரு குடிமக்களே இதற்கு தடையாக இருப்பான். தனது நாட்டைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்பது அவனுடைய இரத்தத்தோடு கலந்ததாக சுவாசத்தோடு கலந்ததாக இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் அவன் தன் நாட்டுக்கு துரோகம் செய்யாமலே இருப்பான்.
ஆனால் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த குடிமகன்களும் தேசியப் பற்றோடு இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது.நூறு வீதம் என்பது சாத்தியப்படாதது மட்டுமல்ல, அந்நிலைப்பாடு எங்கும் எதிலும் இல்லை.
உளவு பார்த்தலில், அந்தந்த நாடுகளிள் உள்ள மனிதர்களின் பண்பாட்டு விழுமியங்களும், குணவியல்புகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஒரு நாட்டின் மொத்த சனத்தொகையும் சிறப்புடன் வாழ்தல் என்பதைக்
கண்டறிவதில் உளவு பார்க்கும் நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன.

ஒரு நாட்டின் அனைத்துக் கட்டமைப்புகளிலும் பணி செய்யும் பணியாளர்கள் பணிக்குரிய பெயருடன் அழைக்கப்பட்டாலும் அவர்களும் சாரசரி மனிதர்களே. வேதியல் மூலகங்களால் உருவாக்கப்பட்ட மனித உடல்கள் அனைத்து உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கொண்டதாகவே இருக்கும்.ஒவ்வொரு தனி மனிதனுக்கும் விருப்பு வெறுப்புக்களும் ஆசைகளும் வேறு வேறு விதமாகவே இருக்கின்றன.
உலக மக்கள் அனைவரினதும் பழக்க வழக்கங்களோ பண்பாட்டு விழுமியங்களோ விருப்பு வெறுப்புக்களோ ஆசைகளோ ஒரே மாதிரியாக இருக்கவே இருக்காது. நாட்டுக்கு நாடு வேறுபடும். இந்த வேறுபாட்டையும் அந்தந்த நாட்டு தனிமனிதர்களின் அகத்தையும் புறத்தையும் அறிந்து கொள்வதே உளவு நிறுவனங்களின் பிரதான பணியாகும்.
தனித்தனி மனிதர்களை இந்நிறுவனங்கள் மிகத் தெளிவாக ஆய்வு செய்கின்றன. பல்வேறு ஒத்த குணங்களுடையவர்களை தமது பார்வை என்ற வலைப்பின்னலுக்குள்ளும்;, தனித்தனி வலைப்பின்னலுக்குள் உளவு நிறுவனங்கள் கொண்டு வந்து விடுகின்றன.
வெளிநாடுகளில் தனது பணிசார் நிறவனங்களை நிறுவியுள்ள நிறுவனங்களில் உணவுக் கடைகளும் உளவு பார்த்தலில் பெரும் பங்கு வகிக்கின்றன.
தமக்கு விருப்பமான உணவை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளும் ஒருவன் வெகு விரைவில் அந்தக் கடையில் தயாரிக்கப்படும் உணவுக்கு இசைவாக்கம் பெற்று அதற்கு அடிமையாகிவிடுவான்.இவ்வாறு அடிமையாகிவிடுபவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து அதிகாரிகள் வரை இருப்பார்கள்
ஒரே குணவியல்பு கொண்டவர்களுக்கிடையில்கூட மிக நுண்ணிய வேறுபாடுகள் இருக்கும். இந்த நுண்ணிய வேறுபாடுகளையும் உளவு பார்க்கும் நிறுவனங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து தனக்குத் தேவையான இரகசியங்களை பெற்றுக் கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியையோ அல்லது சாதாரண பணியாளர்களையோ மெதுவாக உளவு நிறுவனங்கள் அணுகத் தொடங்கும்.
(தொடரும்)
![]()