அக்கரைப்பற்று பிரதேச சபையில் பிரியாவிடை நிகழ்வும், பரிசளிப்பும்.!
அக்கரைப்பற்று பிரதேசசபை உத்தியோகத்தர்களின் நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த பிரியாவிடை நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய உத்தியோகத்தர்களின் குழந்தைகளுக்கு பரிசளிக்கும் நிகழ்வும். அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் ஏ றாசிக் தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றது.
நீண்டகாலமாக பிரதேச சபையில் கடமை புரிந்து வேறு காரியாலயங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் இரு உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் விதமாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளராக இருந்த அக்கறைப்பற்று பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகர் எம் எஸ் ஜாபர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ நிஹாறா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எல் இர்பானின் புதல்வி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என் ஐ எஸ் நிஸ்தார் (விரிவுரையாளர்) மற்றும் திருமதி பீ ஏ எச் ஏ நிஸ்பா அவர்களின் புதல்விகள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்ததை முன்னிட்டு அவர்களுக்கு தவிசாளர், உதவித் தவிசாளர், உறுப்பினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இந் நிகழ்வில் உதவித் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் உட்பட அக்கரைப்பற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.