கவிதைகள்

கீதை பாதை காட்டும்!…. ( கவிதை )…… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

போதை பாதை மாற்றும்
கீதை பாதை காட்டும்
மேதை விடிவை காட்டும்
பேதை முடிவை காட்டும் 
 
ஞானம் தெளிவை காட்டும்
மோனம் உயர்வை காட்டும்
தானம் தருமம் காட்டும்
ஈனம் இளிவை காட்டும்
 
தேடல் திறலை காட்டும்
நாடல் விருப்பை காட்டும் 
சாடல் குணத்தை காட்டும்
ஊடல் உரல் காட்டும் 
 
கூடல் நட்பை காட்டும்
குழப்பல் பிரிவை காட்டும்
தாழல் பண்பை காட்டும்
தடுத்தல் தலைமை காட்டும்
 
கற்றல் உயர்வை காட்டும்           
நிற்றல் வாழ்வை காட்டும்
பற்றல் மனதை காட்டும்
பார்த்தல் பரிவை காட்டும் 
 
மறத்தல் மகிழ்வை காட்டும்
துறத்தல் தூய்மை காட்டும்
இறத்தல் நிறைவை காட்டும்
பிறத்தல் தொடர்பை காட்டும் 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *