கட்டுரைகள்

சுயநலவாதிகளான நடிகர் விஜய்,நடிகர் சிம்பு,அமெரிக்க அதிபர் ரம்ப் ஆகியோர்!….. ஏலையா க.முருகதாசன்.

இணையத்தளங்களில் வெளிவந்த சில செய்திகள் தொடர்பான எனது பார்வைகள்!

நாம் இன்று நடக்கும் உலக அரசியலை, கடந்தகால உலக அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எமது சிந்தனை பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக அரசாட்சி செய்த மன்னர்களைத் தேடி ஓடி ஒப்பீடு செய்ய மனம் துணிகிறது.

சனநாயக ஆட்சியைத் தெரிவு செய்யும் உரிமை மக்களின் கைகளில் ஒப்படைக்காது,மக்களின் வாழ்வையும் மன்னர்களே தீர்மானித்தல் என்பதும் ஒரு காலகட்டத்தில் இருந்த ஆட்சி முறைதான்.

அன்றைய காலத்தில் அவர்கள் காரண காரியம் இல்லாமல் வலுவிழந்த நாடுகள் மீது போர் தொடுப்பதும் மிகச் சாதாரண விடயமாகவே இருந்தது.

அதற்கொப்ப ஒரு ஒரு சம்பவம் இந்த நூற்றாண்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.அமெரிக்காவில் இந்த மன்னர் காலத்தை மீட்டுக் கொண்டு வந்து மக்கள் மீது திணித்திருக்கிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அவர்கள்.

அவர்களின் படைகள் பல நாடுகளில் சமாதானத்தை நிலை நாட்டவென நிலை கொண்டு ஒற்றர் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

போராயுதங்களை விற்க வேண்டுமே அதற்காக போரும் தொடங்கப்படுகின்றன.அரச மமதையுடன் சனநாயகத்தை புறக்கணிக்கும் செயலும் அமெரிக்காவில்தான் நடக்கிறது.

அமெரிக்க சனாதிபதி தேர்தலில் படுதோல்வியடைந்து தை மாதம் இருபதாம் திகதி 2021 வரை மட்டுமே பதவி வகிக்கப் போகிற ரம்ப் மன்னர் காலத்து தனிக்காட்டுராஜா தர்பாரை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார்.

அற நனைச்சவனுக்கு குளிரென்ன கூதல் என்ன என்பது போலவும் திருவிழாக்களில் காலை உதைத்து அடம்பிடிக்கும் குழந்தை போல பதவியை விடமாட்டன் என்று அடம்பிடித்தும்;,தனது ஊழலுக்கு உதவி செய்யுமாறு நீதிமன்றங்களையே குழப்ப முயற்சித்தமையை நோக்கும் போதும்,அமெரிக்காவின் சனநாயகமே ஒரு தனிமனிதனால் அவமானப்பட்டு தலைகுனிந்தமை வரலாற்றுப் பதிவாகிவிட்டது.

ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து நாடாளுமன்றத்தினால் உறுதிக் கடிதம் கொடுக்கப்படவிருந்த அன்று ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட செய்தியானது அண்மைக் காலம் வரை உலகம் அறிந்திராத அனுபவம்.

நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பது அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களால் பல நாடுகளில் நடைபெற்று வருபவைதான்.

அதனை அரசுகளும் அனுமதித்திருக்கின்றன.ஆனால் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைத் தூண்டுதலை செய்யுமளவிற்குத் துணிச்சலைக் கொடுத்தது எது ? யார்? என்று நோக்குகையில் ரம்பின் தூண்டுதலினால்தான் அந்து அதிரடி நுழைவு ஏற்பட்டிருக்கின்றது என்பது தெட்டத் தெளிவாகவே தெரிகின்றது.

தேர்தல் முடிவுகள் வந்ததன் பின்னர் ரம்பின் நடவடிக்கைளும் அறிக்கைகளும் வன்முறைகளதை; தூண்டும் விதத்திலேயே அமைந்து வருகின்றன.

நாடாமன்றத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த நடவடிக்கையை உற்று நோக்கும் போது இது ரம்பின் ஆலோசனையின் பேரில் முகவர்களினால் இனவாதப் போக்குள்ளவர்களை ஒன்று திரட்டி மேற்கொள்ள செயல்தான் என்பது அப்பட்டமான உண்மையே.

கலகத்தை அடக்க முயற்சிக்கையில், வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற நுழைவைத் தடுக்க எடுத்த நடவடிக்கை காரணமாக காவல்துறையினர் அவர்களைத் தடுக்கையில் ஏற்பட்ட கலவரத்தில் ஐந்து பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியமை அமெரிக்காவிற்கே வெட்;கக்கேடு.

அதன்பிறகு கலகக்காரர்களின் செயலை, இது சனநாயக விரோதச் செயல் அமெரிக்கச் சட்ட அளுமைக்கு எதிரான செயல் என ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டமை பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் வித்தையாகும்.

அமெரிக்கா இதுவரையில் பல சனாதிபதிகளின் ஆளுமைக்குட்பட்ட நாடாக இருந்திருக்கிறது.அவர்களில் மிதவாதப் போக்கும் இனவெறியும் கொண்டு உலகச் சண்டியனாக தம்மைக் காண்டிக் கொண்ட சனாதிபதிகள்கூட அமெரிக்கச் சட்டத்திற்கு தலைவணங்கி அதற்கமைய தமது பதவிகளை அணுகியிருக்கிறாரர்கள்.

ஆனால் முதன்முதலான அமெரிக்காவின் வரலாற்றின் பக்கங்களை அவமானப் பக்கங்களாக எழுத வைத்தமைக்கான காரணகர்த்தாவான ரம்ப் என்ற ஒரு பதவிப் பேராசை பிடித்த மனநோயாளியை பதவிக்கு கொண்டு வந்த அமெரிக்க மக்களே தமக்குத் தாமே தலையில் மண்ணை அள்ளிப் போட்டவர்களாகும்,அவர்களே அதற்குப் பொறுப்பு.

……….

கொரோன தொற்றுக் காரணமாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தம்மால் முடிந்தளவு பொதுமக்களுக்கு பாதுகாப்புகளை ஏற்படுத்தி வருகின்றன,அறிவுரைகளைச் சொல்லி வருகின்றன.

தமிழக அரசும் அதனைச் சரியாகவே செய்து வருகின்றது.இணையத்தள செய்திகள் வழியாகவும் காணொளி வழியாகவும் தமிழக நிலவரத்தைக் கவனிக்கும் போது,நீ சொல்றதைச் சொல் நான் செய்யிறதைத்தான் செய்வன் என்பது போல தமிழக மக்கள் தமிழக அரசின் அறிவுரைகளைப் புறக்கணித்து நடப்பதையும் காணக்கூயதாகத்தான் இருக்கின்றது.

தமிழக மக்களின் தொகையைப் பொறுத்தவரை மக்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் நோக்குடன் ஐதாகப் போகும் சாத்தியம் எப்பொழுதுமே ஏற்படப் போவதில்லை.

நூறுபேர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்பார்களானால் அதில் பத்துப் பேர் மட்டுமே முகக் கவசம் அணிந்திருப்பதை கவனிக்க முடிகின்றது.

மக்கள் கூடுவதற்கான இடங்களாக இருப்பவை கடைகள்,கோவில்கள், தியேட்டர்கள் என்பவையே.இவற்றில் கோவில்களிலிருந்தும் கடைகளிலிருந்தும் சூழ்நிலையைப் பொறுத்து மக்கள் தாமாகவே தம்மைக் காத்துக் கொள்ளவென அந்த இடத்தில் இருந்து எப்பொழுதும் வெளியேறலாம்.

ஆனால் தியேட்டர்கள் அப்படியல்ல.தியேட்டருக்குள் படம் பார்க்கப் போகும் ஒருவர் படம் முடியும் வரை தியேட்டருக்குள் இருந்துதான் ஆகவேண்டும் என்ற நிலை அங்கு உள்ளது.

ஐதாக இருத்தல் என்பதற்கமைய தியேட்டர்களில் எவ்வளவு இருக்கைகள் இருக்கின்றனவோ,அவற்றில் ஐம்பது வீத இருக்கைள் மட்டுமே நிரப்பப்பட வேண்டுமென்ற விதியை

மீறுவதற்கமைய நடிகர்களான விஜய் மாஸ்ரர் படத்திற்காக தமிழக முதல்வரைச் சந்தித்து தியேட்டர்களின் அனைத்து இருக்கைகளும் நிரப்பப்படுவதற்கான அனுமதியைக் கேட்டுள்ளார்.

அதே போல நடிகர் சிம்புவம் தனது ஈஸ்வரன் படத்திற்காக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இருவரின் செயல்களையும் பார்க்கும் போது இவர்கள்: இருவருமே பொதுமக்களின் நலனிலோ அவர்களின் ஆரோக்கியத்திலோ கொஞ்சம்கூட அக்கறை இல்லாத படு சுயநலவாதிகள் என்பது தெட்டத் தெளிவாகவே தெரிகிறது.

இரசிகர்களின் தோள்களில் தமது வளமான வாழ்க்கையை நிர்மானிப்பவர்கள் என்பதும் கோடிக்கணக்கான பணத்தைச் சம்பாதித்த பின்பும் இரத்தத்தை உறிஞ்சம் மூட்டைப் பூச்சிக்கும் அட்டைக்கும் ஒப்பானவர்கள் என்பதை அவர்கள் காட்டிக் கொண்டுவிட்டார்கள்.

கோவிட் 19 தொற்றால் அன்றாடங் காச்சிகளான கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்து உணவுக்கே திண்டாடி பெரும் துயரத்தில் இருக்கும் சூழலில் தமது படத்திற்கு தியேட்டரில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிறைந்திருக்கும் வகையில் ஆவன செய்ய வேண்டும் எனச் சிந்திப்பதே தவறு அதை எவ்வித சமூகப் பொறுப்புமற்ற விதத்தில் வேண்டுகோள் விட்டமை மூலம் பொதுமக்களை அவர்கள் எந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள் என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

திரைப்படம் பார்க்காவிட்டால் எவரும் எந்தக் கஸ்டத்தையும் அனுபவிக்க மாட்டார்கள்.

ஆனால் உணவின்மையும் ஆரோக்கியமின்மையுமே மானிடரை அழிப்பவை என்பதை மந்திரிச்சுவிட்ட கோழியாக நடிகர்களுக்காக வெறிபிடித்து அலையும் முட்டாள் இரசிகர்கள் சிந்திக்க வேண்டும்,அவர்கள் உங்கள்

தோள்களில் கால் வைத்து நடக்கிறார்கள் என்பதை உணருங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button