கதைகள்
பன்மடங்கு!….. ( குட்டிக்கதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

கடவுள் நாம் ஒரு நல்லது செய்தால் பதிலுக்கு அவர் பன்மடங்காக நல்லது செய்வார் என்றார் கனகசுந்தரம் கோவிலில் கும்பிட்டுக் கொண்டிருந்த தன் நண்பர் ஞானசுந்தரத்திடம்.
“எதைச் சொல்கிறாய்?” என்றார் ஞானசுந்தரம்,
“கடந்த ஆண்டு இந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பாக அலங்காரம் செய்நு பூஜை செய்தோம். பார்த்தீர்களா, இந்த ஆண்டு எவ்வளவுபேர் விதம் விதமாக கலர் கலராக “மாஸ்க்” மாட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று பதிலலித்தார் கனகசுந்தரம்.
ஞானசுந்தரத்துக்கு கனகசுந்தரம் என்ன சொல்ல வருகிறார் என்று ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தார்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()