கட்டுரைகள்

நடிகைகள் மீது விரிக்கப்படும் சிலந்தி வலைகள்!…. ஏலையா க.முருகதாசன்.

அண்மையில் மரணம் அடைந்த சின்னத்திரை நடிகையான சித்திராவின் மரணத்தில் பல புதிர்கள் பொதிந்து கிடப்பதாக செய்திகள் சொல்கின்றன.

சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளில் பெரும்பாலனாவர்கள் சக நடிகர்களாலேயோ அல்லது இயக்குனர்களாலேயோ அல்லது சினிமாவில் பணியாற்றும் பணியாளர்களாலேயோ சீரியல்களில் துணை புரியும் பணியாளர்களாலேயோ தவறான கண்ணோட்டத்திலும் பார்க்கப்படுகிறார்கள் என்பதை நிராகரிக்க முடியாது.

சில நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், எனவும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் சினிமா நடிகைகள் அல்லது சீரியல் நடிகைகள் மேல் கொண்ட ஈர்ப்பினால் அல்லது ஆசையினால் அவர்களைத் தமது வலையில் சிக்க வைப்பதற்காக முயற்சித்து ஒருசில நடிகைகள் தம்மை இழந்த நிலையில்கூட சமூகத்துக்கும் கௌரவத்திற்கும் பயந்து தமக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லாது வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

குஸ்புவை எப்படித் திட்டமிட்டுக் காதலித்துக் கல்யாணம் செய்தேன் என்பதை இயக்குனர் சுந்தர்.சி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

ஆன்மீகவாதிகள் என்று சொல்லப்படுறவர்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல.அவர்கள் ஆன்மீகத்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் தமது ஆசிரமத்துக்கு வரும் நடிகைகளை, அழகான பெண்களை தமது வலையில் வீழ்த்துவதற்காக சிவனும் பார்வதியும் ஒன்று சேர்ந்திருக்கும் நிலை ஆன்மீகத்தின் உச்ச நிலை மனம் ஆறுதலடையும் நிலை உடலின் தேவையே ஆன்மாவின் தேவை, லிங்கம்

என்பது ஆண்குறி பீடம் யோனியாகும் இரண்டும் இணைந்திருக்கும் தன்னை மறந்த நிலையை மோகன நிலையென்றும் பக்தையும் குருவும் அதுவாக சிவனும் பார்வதியாக தன்னை மறந்து மோகன நிiலையை அடைதல் பக்தை பெறும் பிறவிப் பயன் எனவும் ஆன்மாவின் மகிழ்ச்சியே இறைவனுக்குரிய இடம் என ஆசிரமத்துக்கு வருவோரில் தமக்கு வேண்டிய அழகான பெண்களை மூளைச் சலவை செய்து தமது இச்சைகளைத் தீர்த்து தவறுகளைச் சரியென அவர்களே ஏற்றுக் கொள்ள வைக்கிறார்கள்.( ஆண்குறியே லிங்கமாகவும் பீடமாக இருப்பது யோனி என்பது லிங்க வழிபாட்டின் தத்துவமாகும்.)

இரஞ்சிதா என்ற நடிகையின் முக அழகில் அவளுடைய இதழ்களின் அழகில் கிறங்கிப் போன நித்தியானந்தா திட்டமிட்டு மன உளைச்சலில் இருந்த அந்த நடிகையை தனது ஆசிரமத்துக்கு வந்தால் மனம் அமைதியடையும் என அவளை வரவழைத்து தனது சிஸ்ஸையாக்கி அவர் அந்த நடிகையை அடைந்த வரலாற்றை எல்லாரும் அறிவர்.

தொழிலபதிகர்கள்; சிலரும் அரசியல்வாதிகள் சிலரும் அவர்களின் வாரிசுகளும் நடிகைகளை தமது வலையில் வீழ்த்துவதற்காக தரகர்களைப் பயன்படுத்துவது தமிழகத்தில் சர்வசாதாரண நிலையாகும்.

இந்தத் தரகர்களும் மிகவும் இயல்பான நண்பர்களாக தம்மைக் காட்டிக் கொள்வதும் நடிகைகளின்(சிலர்) முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொள்பவர்களாக அவர்களைப் பற்றிய செய்திகள் இணையத்தளங்களிலும் அச்சு ஊடகங்களிலும் வருவதற்கும் முகநூல், ருவிற்றர், வட்ஸ்அப், இன்ஸரகிராம் பேஎhன்றவற்றில் பல இலட்சம் இரசிகர்களை கொண்டவர்களாக மாற்றுவதில் திட்டமிட்டு தமது இலக்கை நோக்கி நடிகைகளை நகர்த்துவார்கள்.நடிகைகளை அணுகி தமக்கு உதவி செய்பவர்களை தமது நலனில் அக்கறை உள்ளவர்கள் என நடிகைகளும் நம்புகிறார்கள்.

நடிகைகளில் சிலரும் தாம் பெற்றிருக்கும் வசதியான வாழ்க்கையும் புகழும் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக தொழிலதிபர்களை கல்யாணம் செய்து கொள்வதைப் பெரும் கௌரவமாகக் கருதுகிறார்கள்.

இத்தகு நடிகைகளை வைத்து வணிக நிறுவனங்களும் தமது புதிய கிளைகளைத் திறக்க வைப்பதும்,விசேச தினங்களுக்கான வியாபாரத்தை நடிகைகளை வைத்து விற்பனை செய்வதும், அவரைப் பின்பற்றும் இரசிகப்பெருமக்கள் தமக்கு அந்தப் பொருள் தேவையோ இல்லையோ அதை நடிகையின் கையால் வாங்க வேண்டும் என்பதற்காக அதில் காசைக் கொட்டுவதும் தமிழகத்தில் நடைபெறும் ஒன்றுதான்.

இத்தகு விழாக்களுக்கு வணிக நிறுவனங்கள் எந்தெந்த இடங்களில் இருக்கின்றதோ அந்தந்த தொகுதி நாடாளுமன்ற சட்;டசபை உறுப்பினர்களையோ அமைச்சர்களையோ அழைப்பதும் வாடிக்கையான ஒன்றுதான்.

வணிக நிறுவனங்களுக்கு அரசியல் ரீதியாகவும் அதுசார்ந்த சட்ட ரீதியான பாதுகாப்பும் ஆதரவும் ஊழல்கள் செய்வதை கண்டுகொள்ளாதிருக்கும் தேவை என்பவற்றிற்காக அவர்களை அழைக்கும் போது எந்த நடிகை மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஈர்ப்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை அழைக்குமாறு வணிக நிறுவனங்களுக்கு பரிந்துரைத்து சிபார்சு செய்கிறார்கள்.

வணிக நிறுவனங்களும் தமக்கு மேற்கூறிய அரசியல்வாதிகளின் ஆதரவு தேவையென்பதால்,சமகாலத்தில் புகழ் பெற்றிருக்கும் நடிகைகளை தமது நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொற்படி கேட்கும் வணிக நிறுவனங்களுக்கு தாம் விரும்பும் நடிகைகளை வணிக நிறுவனங்களுக்கு சிபார்சு செய்கிறார்கள்.

அதே வேளை தங்களின் செல்வாக்கினால்தான் குறிப்பிட்ட நடிகைகள் இத்தகு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நடிகைகளுக்கு தெரியப்படுத்த அவர்களும் புளகாங்கிதம் கொண்டு அமைச்சர்கள் அவர்களின் வாரிசுகளை நோக்கி தமது கவனத்தைச் செலுத்த தாம் விரித்த சிலந்தி வலையில் நடிகைகளும் சிக்க வைக்கப்படுகிறார்கள்.

இப்படியான வலையில் சிக்கியவர்தான் அண்மையில் மரணத்திற்குள் திணிக்கப்பட்ட சீரியல் நடிகை சித்திரா.

மேற்கத்தைய திரைப்பட நடிகைகள் சினிமாத் தயாரிப்பாளர்களாலேயோ,இயக்குனர்களாலேயோ ஏற்படும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிராகவும் பாலியல் வன்கொடுமைக்கெதிராகவும் சட்டத்தின் மூலம் தமக்கான நீதியைப் பெறுகிறார்கள்.

மேற்கத்தைய நாடுகளில் பாலியல் பற்றிப் பேசுவது சமூகக் குற்றமும் அல்ல பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்ட நடிகைகள் தொட்டு சாதாரண பெண்கள் வரை அதனைக் கௌரவக்குறைச்சலாக நினைக்காது தமது கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.தமக்கான நீதியையும் பெற்றுவிடுவார்கள். ஏனென்றால் அவர்களின் வாழ்க்கைப் பண்பியலில் அதுவும் ஒன்று.

ஆனால் ஆசிய நாட்டவர்களில் அதிலும் தமிழக நடிகைகளினதும் சாதாரண பெண்களினதும் கோபங்களும் குமுறல்களும் பண்பாடு என்ற கவசத்தில் அடக்கமாகியுள்ளது.

நடிகைகள் மட்டுமல்ல அழகான பள்ளி மாணவிகளும் தொழிலதிபர்கள் சிலராலும் அரசியல்வாதிகள் சிலராலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

பாலியல் வன்கொடுமைகளின் போது அதனை காணொளியாக எடுத்து தொடர்ந்து அவர்களைப் பணயக் கைதியாக்கி வருவதை செய்திகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

தமக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்ல முடியாத சூழ்நிலை என்பது பாதிக்கப்பட்ட பெண்களின் பலவீனமாகவும் ஆண்களின் பலமாகவும் பார்க்கப்படுகின்றது.

சினிமாவிலோ சீரியல்களிலோ நடிக்கும் நடிகர்கள் நடிகைகளுக்கிடையில் ஒரு ஈர்ப்பு ஏற்படுவது சகஜமாக நடைபெறுகிறது.சோடியாக நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கிடையில் அருகிருத்தல் கலகலப்பாக பேசுதல் நகைசசுவையாகப் பேசுதல் என்பன சாதாரணமாகவே நடைபெறுகின்றன.

பி.யு.சின்னப்பா, கிட்டப்பா,தியாகராஜ பகாவதர் ஆகியோர் நடித்த காலத்தில் அதுவும் நடிகைகளைத் தொடாமல் எட்ட நின்று நடிக்கும் காலத்திலேயே நடிக நடிகைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பல பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்துநேசன் பத்திரிகை ஆசிரியர் லக்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஸ்ணன் ஆகியோர் குற்றவாளியாக்கப்பட்டதும் சிறை சென்று விடுதலையானதும்கூட சினிமா வரலாறுதான்.

அன்றைய காலத்தைவிட இன்று நடிக நடிகைகளின் நெருக்கம் மிக அதிகமாகவே இருக்கின்றது.அவர்களுக்கிடையில் இரட்டை அர்த்த உரையாடல் தாராளமாகவே இருக்கும்.

நடிகைகளின் அழகும் அவர்கள் பழகும் பாங்கும் இயல்பாக வித்தியாசமாகவே இருக்கின்றது.சில நடிகைகளின் அழகு பலரைக் கவனிக்க வைக்கின்றது,சபலப்பட வைக்கின்றது.

சில நடிகைகள் சகஜமாக பழகினாலும் தமது எல்லை எது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருப்பதுடன் ஆண் ஒருவர் தன்னுடன் உரையாடும் போது அவர்களின் உரையாடல் மூலமாக தன்னிடம் எதை நோக்கி வருகிறார்கள் என்பதை தெளிவாக எடைபோடுவதால் தம்மை நோக்கி வகுக்கப்படும் வியூகத்தில் இருந்து மிகவும் புத்திசாலித்தனமாக தப்பித்துவிடுகிறார்கள்.

அதே வேளை தமது வளமான புகழான வாழ்வுக்காக அரசியல்வாதிகளையும் தொழில் அதிபர்களையும் பயன்படுத்தும் நடிகைகளும் உண்டு நடிகர்களும் உண்டு.

பணம் புகழ் இரண்டுக்குமாக வளைந்து கொடுக்கும் நடிகைகளும் அரிதாக இருக்கவே செய்கிறார்கள்.நடிகைகள் பெற்றிருக்கும் புகழ் பணம் அழகு போன்றவற்றினால் கவரப்படும் அரசியலவாதிகள் தரகர்களாக சிலரை நடிகைகளிடம் அனுப்பி மெது மெதுவாக அவர்களுக்கு பலவிதமான ஆசைகளை ஊட்டி தாம் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார்கள்.

வெளிப்படையாக அப்படி நடக்கும் நடிகர்களைக்கூட தொலைக்காட்சி நிறுவனங்கள் விசேச விருந்தினர்களாக தமது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துக் கௌரவப்படுத்துகிறார்கள்.தொலைக்காட்சி நிறுவனங்கள் என்பவை வணிக நிறுவனங்களே.அவர்கள் அழகை விற்பனை செய்பவர்கள்.

எவர் இரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருக்கிறார்களோ, மக்கள் மத்தியில் பேசப்படுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களை கவர்ச்சிகரமான வணிகப் பொருளாக்குவதே தொலைக்காட்சிகளின் வணிகமாகும்.

சினிமாவிலோ சீரியல்களிலோ சில நடிகைகளுக்கு பொருத்தமான பாத்திரங்கள் கிடைப்பதும் அவற்றில் அவர்களின் நடிப்பு சிறப்பாக அமைந்துவிடுவதால் அந்த நடிகை பலரால் ஈர்க்கப்படுகிறாள்.

சீரியல் நடிகை சித்ராவின் அழகும் அவர் உரையாடும் பாங்கும் அவர் பங்குபற்றிய நிகழ்ச்சிகளில் அவர் பெற்ற வரவேற்பும் அவரைப் பலர் விரும்புவதற்குக் காரணமாகும்.

அவரின் மரணத்திற்கான காரணத்தை அவர் மீதும் அவரின் நடிப்பினால் ஈர்க்கப்பட்ட அவரின் நிகழ்ச்சிகளை சீரியல்களைப் பார்த்த உலகத் தமிழ் இரசிகர்கள் ஒற்றைவழிப் பாதையில் தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

கேமந்த்; சித்ராவை திட்டமிட்டு காதலித்தார் என்பது அவரின் மரணத்திலிருந்து தெரிய வருகிறது.அவருக்கு இருக்கும் அரசியல்வாதிகளின் பழக்கம் என்பது ஒரு நோக்கத்தைக் கொண்டதா என்பதும், கேமந்த்அரவசியல்வாதிகளால் பயன்படுத்தப்பட்ட அம்புவா எனச் சந்தேகிக்க இடமுண்டு.

சித்ரா மீது கேம்ந்த் கொண்டது உண்மையான காதலா என்பது சந்தேகத்திற்கு இடமானதே.அதே வேளை பாண்டியன் ஸ்ரோர்சில் அவர் முல்லையாகவும் குமரன் கதிராகவும் நடித்த நடிப்பை நடிப்பு என்று பார்க்கவியலாதவாறு கணவன் மனைவி இயல்பாக எப்படியிருப்பார்களோ அவ்வாறு இயற்கையாக நடித்திருந்தார்கள்.

முத்தக் காட்சியில் நடித்ததினால் கேமந்த்துக்கும் சித்ராவுக்குமிடையில் மனஸ்தாபம் ஏற்பட்டதாக பல நாட்களுக்கு முன் ஒரு செய்தியில் பார்த்தேன்.

இன்னொரு காட்சியில் முல்லையான சித்ரா குமரன் என்ற கதிரிடம் உங்களுக்கு விருப்பமென்றால் உடனேயே

பிள்ளையொன்றை பெற்றுத் தருகிறேன்.உடனே என்றால் நாளைக்கல்ல அது முடியாதுங்க பத்து மாதம் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னவள் கதைவைப் பூட்டிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கதிருடன் கட்டிலில் அவள் சுவரோரமாகவும் அடுத்து கதிரும் படுக்கிறார்கள்;.

என்னதான் தனது காதலி நடிகை என்று தெரிந்து காதலித்தாலோ அல்லது கல்யாணம் செய்திருந்தாலோ சினிமாவிலோ சீயல்களிலோ மனைவியாகவோ காதலியாகவோ நெருக்கமாக நடிப்பதையோ கட்டிலில் ஒன்றாகப் படுத்திருக்கும் காட்சியில் நடிப்பதையோ நடிப்புத்தானே என்று வெளிப்படையாக சொல்லி நடந்து கொண்டாலும் உள்ளுக்குள்ளை மனச்சங்கடம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

சித்ரா தொடர்ந்து நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்பது கேமந்த்துக்கு சீரியல் மூலம் மட்டும் ஏற்பட்டது அல்ல.

குமரனும் சித்ராவும் ஆடிய நடனங்கள் சரியான ஜோடி என்ற வரவேற்பை இரசிகர்களிடம் இருந்து பெற்றமையும், அவை கேமந்த்தும் சித்ராவும் காதலர்கள் ஆகும் முன் நடைபெற்ற நிகழ்ச்சியாக இருந்தாலும்கூட அவை தொடர்ச்சியாக அவை சமூக வலைத்தளங்களில் பலராலும் பார்க்கப்பட்டதால் பொருத்தமான ஜோடி என்ற ஆதரவுக் கருத்துக்களாலும் குமரன் கல்யாணம் செய்தவர் என்ற விபரந் தெரியாதவர்கள் சித்ரா குமரனையே கல்யாணம் செய்தால் அவர்கள் வாழ்விலும் பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள் என்ற இரசிகர்களின் விமர்சனங்களும் கேமந்த்தை எரிச்சலடைய வைத்திருக்கலாம்.

நடிகைளின் அழகுக்காகவும் புகழ் பணத்துக்காகவும் இளைஞர்கள் தாம் விரும்பும் அந்த நடிகை காதலியாக வேண்டும் மனைவியாக வேண்டுமென்று கற்பனை வசப்படுவார்கள், ஆசைப்படுவார்கள் அது நிறைவேறுவதும்

உண்டு.அது மாதிரித்தான் கேமந்த் சித்ரா ஜோடியின் காதலும் அது கல்யாணம் வரை சென்றதுமாகும்.

முன்பும் பல நட்சத்திர ஜோடிகள் தன்னைத் தவிர்த்து வேறொரு நடிகருடன் இணைந்து ஜோடியாக நடித்த காரணத்திற்காகவே விவாகரத்துச் செய்திருக்கிறார்கள்.

கேமந்த் ஒழுக்கமில்லாதவர் என்று தாய் உட்பட அவருடன் நடித்த சக நடிகைகள் சொல்லியிருந்தும் அதனைப்; பொருட்படுத்தாமல்; கேமந்த்தை விடாப்பிடியாக கல்யாணம் செய்யும் வரை சித்திராவைக் கொண்டு சென்றது அவருக்கிருந்த கடனா தேவைகளா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அவர் மரணத்திற்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களின் அறையில் வேறு யாராவது குறிப்பாக அரசியல்வாதிகள் வந்து காத்திருந்தார்களா என்ற சந்தேகப் பார்வையையும் இம்மரணத்திற்கு உட்படுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது.

தனக்கு கிடைக்காத மலர் வேறு எவரின் தலையிலும் சூடப்படல் கூடாது என்ற அரசியல்வாதியின் சூழ்ச்சி என்பதா இந்த மரணம்.

சித்ராவின் நடனங்களையும் அவரின் பாண்டியன் ஸ்ரேர்ஸ் நடிப்பையும் பார்த்த உலகம் பூராவும் உள்ள இரசிகர்கள் எதிர்த் திசையில் சிந்திப்பது அறிவுக்கு ஒவ்வாத விசயம் எனத் தமது சிந்திக்கும் எல்லையைச் சுருக்கி விட்டிருக்கிறார்கள்

சித்ராவின் அழகும் அவரின் சிரிப்பும் உரையாடும் முறையும் துணிச்சலான மனமும் கம்பீரமும் அவரின் உடலும் பலரின் கண்களை பேதலிக்க வைத்தது மட்டுமல்ல அவரை மரணம் வரை கொண்டு செல்லும் போது அவரின் உளவியல் பட்டப்படிப்புக்கூட அவரைச் சிந்திக்க விடாது நெருக்கடி கொடுத்து மரணத்தை தழுவ வைத்துள்ளது.

இதுவரையும் டயனா, யசீர் அரபாத்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,அப்துல்கலாம், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் மரணத்தின் முடிச்சுக்கள் பற்றிப் பேசப்படுகின்றனவே தவிர எதுவும் இதுவரை அவிழ்க்கப்படவில்லை.சித்ராவின் மரணமும் அவிழ்க்கப்படாத முடிச்சாகவே காலத்திற்கும் இருக்கப் போகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button