Featureநிகழ்வுகள்

அவுஸ்திரேலியா மாவீரர்நாள் 2020 அறிவித்தல்!…..

மாவீரர்நாள் – மெல்பேர்ண் – 2020 அறிவித்தல்….

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும்2020ஆம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்றது.

கடந்த காலங்களைப் போலன்றி இவ்வாண்டு நோய்த்தொற்றையும் அதற்காக நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு மாநிலமும் தமக்குரிய முறையில் மாவீரர்நாள் நிகழ்வை ஏற்பாடு செய்கின்றது. அவ்வகையில் விக்ரோறிய மாநிலத்தின் நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு மெல்பேர்ண் மாவீரர்நாள் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடந்த காலங்களைப் போலன்றி இம்முறை திறந்த மைதானத்தில் நிகழ்வு நடைபெறும். நவம்பர் 27ம் நாள் மதியம் 1.30 மணியிலிருந்து மாவீரர் திருவுருவப் படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்துவதற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அரைமணிநேர இடைவெளிக்கும் அதிகபட்சம் 50 பேர்வரை சமூக இடைவெளியுட்பட, ஏனைய சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்திச் செல்லலாம்.

மதியம் 1.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை பொதுமக்கள் மைதானத்துக்கு வருகை தந்து மலர்வணக்கம் செலுத்தலாம். நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளைக் கருத்திற் கொண்டுஅரைமணிநேர இடைவெளிக்கு அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒரேநேரத்தில் அதிகமானவர்கள் வருகைதந்து சுகாதார நடைமுறைகளை மீறாமலிருப்பதை உறுதிசெய்யும் முகமாக முற்கூட்டியே தங்கள் வருகையையும், நேரத்தையும் பதிவு செய்யும்வண்ணம் அன்புடன் வேண்டப்படுகிறீர்கள். பதிவு செய்து நிகழ்விடத்திற்கு வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

மதியம் 1.30 தொடக்கம் 2 வரைபின்பு 2 தொடக்கம் 2.30 வரை என்று ஒவ்வொரு அரைமணி நேர இடைவெளிக்கும் முன்பதிவை எதிர்பார்க்கின்றோம்.

உங்கள் வரவை kaanthalbook@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0433002619 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ (SMS) அனுப்பி வைக்கவும்.

பெயர் –

தொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரி –

வதிவிட முகவரி-

வருகைதரும் நபர்களின் எண்ணிக்கை –

வரப்போகும் அரைமணிநேர இடைவெளி – (Eg: 2-2.30 pm)

 

என்ற விபரங்களை அரசாங்க விதிதுறைகளிற்கமைய அனுப்பி, முன்பதிவு செய்து கொள்ளவும். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதிவு (வருகின்ற நபர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டு) போதுமானது. 50 பேர்வரை ஒரு நேர இடைவெளிக்குள் பதிவு செய்யப்பட்டால் அதன்பின்னர் பதிவுக்கு வருவோர் வேறு நேரத்தைத் தெரிவு செய்யும்படி அறிவுறுத்தப்படுவார்கள்.

முன்பதிவு  தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரையோ அல்லது தரப்பட்டிருக்கும் மின்னஞ்சல்தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளவும்.

நிகழ்வு நடைபெறும் இடம் :– BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – Victoria 3151 (Melway Ref: 62 7). நேரம்:– 1.30 – 8PM, Friday, 27th November 2020.

இவ்வண்ணம்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா

===============================

மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

Here we enclosed the MELBOURNE, SYDNEY, BRISBANE, PERTH, ADELAIDE, and CANBERRA Maaveerar Naal Flyers been Attached here for respective state Tamil people’s kind information.

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில்நவம்பர் 27ம் திகதி தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறவிருகின்றனஇந்தவகையில் ஓஸ்ரேலிய  நாட்டிலும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிலையில்ஒஸ்ரேலியாவின்  விக்ரோரிய  மாநிலமெல்பேர்ன் பேர்வுட் கிழக்கு மைதானம், பேர்வுட் ஹவே, பேர்வுட் கிழக்கு (BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – 3151)  எனும் இடத்தில் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30மணி முதல் இரவு 8மணி வரை தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

சிட்னி மாநிலத்தில் Bowman Hall, Blacktownஇல் நவம்பர் மாதம் 27ம் திகதிவெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிமுதல் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

==> அத்துடன் மெல்பேண் மாவீர் நிகழ்வுகளுக்கு தற்போதய கோவிட் 19 அரசாங்க விதிமுறைகளிற்கு அமைய குறிப்பிட்ட அரை மணிநேரங்களிற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நிகழ்வு இடத்தில் விக்டோரிய மாநில கொரானா விதிமுறைகள் பின்பற்றப்படும். நிகழ்விடத்தில் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.

நவம்பர் 27ம்திகதி எம் தேசத்து புதல்வர்களை நினைவில் நிறுத்தி மரியாதை செய்ய நம் பேதங்களை மறந்து  அனைவரும் திரண்டு வருவோம்

அத்துடன் இம்மின்னஞ்சலைப் பெறும் தனிப்பட்ட அன்பர்கள்உங்களிற்கு தெரிந்த உற்றார்உறவினர்,  நண்பர்களுக்கும் இத்தகவல்களைத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி.

 

Let us Remember Our Heroes Together

Dear All

In commemoration of our beloved Martyrs, Who sacrifices their life for our motherland, we pay homage and respects to their lives on this Auspicious Day in November.

On November 27th, we ask the Tamil people of Australia to gather before the flames of sacrifice and pay respects to our fallen heroes. Together, we will remember the courage and determination of those who made the ultimate sacrifice for one dream. Together, we will carry forward the ashes of remembrance and the determination of the fallen. And together, we will vow to fulfill the dreams of those before us who lived and died for our nation.

Nov 27th, this is the day we remember our true heroes and all those who have lost their lives in the conflict to free our homeland Tamileelam. This is the day we set aside our troubles to remember lives of the men and women who fought bravely for our land, and to graciously honour them too. In memory of all those who have sacrificed their lives for the freedom in Tamileelam, let us unite as one and promise ourselves that the journey is not over. Along with many others, we humbly request that every Tamil in and around Melbourne attends the remembrance event on the 27th of November to pay respect to those many lives now lost forever. Hope is on our side and together, we shall succeed to reach towards our Tamil Eelam.

Please forward this email through your phone contacts & your personnel Email contacts, Try your best to be there, before the event starts..

Nandri,
Tamilarin Thaagham, Tamileela Thaayagam

Melbourne “Maaveerar Naal” venue details

 TIME: 1.30 – 8PM, Friday, 27th November 2020.
Venue: BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – Victoria 3151 (Melway Ref: 62 B 7)

Sydney “Maaveerar Naal” venue details

 TIME: 6PM, Friday, 27th November 2020.
Venue: Bowman Hall, Blacktown, NSW 2148

PERTH , WA (பேர்த்)
Madington Community Centre, 19 Alcock St Maddington, WA 6109
Time: 7.05pm
Contact: 0421 514 004 / 0469 823 269

Brisbane, Qld (பிரிஸ்பன்)
39 Counihan Road, Seventeen-mile Rock, QLD 4073
05.30pm – 08.30pm
Contact: 0438 983 405 / 0470 514 159

Adelaide, SA (அடேலையிட்)
Italian Community Centre, 304 Waterloo Corner Road, Paralowie, SA 5108
From 5.45pm
Contact: 0405 711 184

Canberra, ACT (கான்பரா)
Weston Creek Neighbourhood Hall, No.6 Gritten Street, Weston ACT 2611
From 7pm
Contact: 0424 157 366 & 0450 992 127

Also PLEASE FORWARD THIS EMAIL TO YOUR FAMILY AND FRIENDS

ALSO BRISBANE, ADELAIDE, CANBERRA and PERTH Maaveerar Naal Flyers been Attached here for respective state Tamil people’s kind information.

———————————————-

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.