Featureகதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!… 03….. ( உண்மைக் கதை)…. ஏலையா க.முருகதாசன்.

சிங்கப்பூரில் மூன்றுவருடகால இனிமையான வாழ்வும் எனக்காக வாழ்ந்தவளும்

(ஒரு உண்மைக் கதை) (3)

மனைவியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள். 

சனிக்கிழமை விருந்துபசாரம் நடைபெற்றதால் ஞாயிற்றுக்கிழமை விடிய எழும்பி வெளியே போய், பொதுத் தொலைபேசி நிலையத்தில் நின்று யோகமலருக்கு ரெலிபோன் எடுத்தேன்.அவள்தான் ரெலிபோனை எடுத்து கலோ என்றாள். நான் முருகதாசன் கதைக்கிறேன் என்றேன்.அதற்கு அவள், முருகதாசன் என்று சொல்லாதீங்க உன்னுடைய கஸ்பெண்ட் பேசுறேன்னு சொல்லுங்க, நான் உங்க மனைவிதான் பேசுறன் என்றவள் நேற்றையிலருந்து நான் உங்க மனைவிங்க,அது எல்லார் முன்னிலையிலும் பேர்சனல் மனேஜர் சொல்லிட்டாங்க.ஆமா ராத்திரி நல்லாய் தூங்கினீங்களா என்றாள் .இல்லை என்றேன்.நானுந்தான் ராத்திரி தூங்கவேயில்லை.சரி காலைச் சாப்பாடு சாப்பிட்டீங்களா.இல்லை இனித்தான் என்றேன்.என்ன சாப்பிடப் போறீங்க என்றாள்.முன்னால ஒரு பேக்கறி இருக்கு, அங்கதான் சாப்பிடப் போகிறேன்.சரி சாப்பிட்டிட்டு போய்த் தூங்குங்க என்றவுடன் பொறுங்கள் நீங்கள் கதைக்கிறது வீட்ல உள்ளவங்களுக்கு கேட்காதா என்றேன். ஆமா கேட்குந்தான்.வீட்ல அம்மா மட்டுத்தான் இருக்க,அம்மாகிட்ட எல்லாம் சொல்லிட்டன்.

அம்மா ஒன்றுமே சொல்லேலையா என்று கேட்க,இது எங்க போய் முடியுதோ தெரியாது என்னவோ செய் என்றுட்டா,நாளை சொல்றேனே, பொறுங்க பிலிம் றோலை பிரிண்ட் போட கொடுத்திட்டு வாங்க சரியா, சாப்பிட்டிட்டு போய்த் தூங்குங்க, நானும் தூங்கப் போகிறேன் பை என்று சொல்லிபோட்டு போனை வைத்தாள்.

திங்கட்கிழமை அவள் வேலைக்கு வரும் போது அவளுடைய முகம் தெளிவாகவே இருந்தது.வேலை ஆரம்பித்து பத்து நிமிடத்துக்குள்ளேயே நேற்று நடந்த சம்பவம் கிசு கிசு என்று எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.வேலை தொடங்கி அரை மணித்தியாலத்திற்கு பிறகு அகமட் வந்து சொன்னார் உங்களுடைய சிறிலங்கன்ஸ் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு பேர்சனல் மனேஜரின் அறைக்குப் போங்கள் அங்கை கூட்டம் இருக்குது என்றார்.அவள் கேட்டாள் எதற்கு மீற்றிங் என்று.தெரியாது போயிட்டு வந்து சொல்றன் என்று அவளுக்குச் சொல்லிப் போட்டு பொம்பிளைப் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு பேர்சனல் மனேஜரின் அறைக்குள் போனோம். அந்த அறை கூட்டம் நடப்பதற்குரிய அகலமான அறையாக இருந்தது. எல்லாரையும் இருக்கச் சொன்னவர்,’இப்ப இங்கு உற்பத்திகள் குறைவாக இருக்கிறபடியால், சிறீலங்கன் வேலையாட்களை அடுத்த மாதம் கெலாங் என்ற இடத்திலிருக்கும் என்எம்பி என்ற இன்னொரு பக்ரறிக்கு மாற்றப் போகிறோம்.கொஞ்ச் நாளைக்கு அங்கு வேலை செய்வீங்க பிறகு சச்சியிலிருக்கும் அவர்களுடைய புதிய கட்டிடத்தில் வேலை செய்வீர்கள்.நான் உங்களுடைய ஏஜன்சியுடன் பேசிட்டேன், அவருடன் சேர்ந்துதான் செய்கிறோம் என்றார்.

வெளியே வந்ததும் இயந்திரத்தை திருத்துகிற மாதிரி அவளுக்கு கிட்ட போய் அடுத்த மாதத்தில் இருந்து எங்களுக்கு புது பக்ரறியில் வேலை என்றேன்.ஐயோ

கடவுளே உண்மையா.நான் இனி இங்க வேல செய்ய மாட்டன்.நீங்க இல்லாத இடத்துல எனக்கு எதுவும் வேண்டாம் நான் வேலய றிசைன் பண்ணிட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்க வந்து உங்களப் பார்ப்பன்.நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அகமட் அந்தப் பக்கமாக வர அவள் தன்னுடைய நிலையை விளங்கப்படுத்தினாள் வேலை செய்து கொண்டே அவள் கதைத்ததால் அவர் வேலை நேரத்தில் கதைத்துக் கொண்டிருப்பதை பெரிது படுத்தவில்லை.

அவள் பேர்சனல் மனேஜருடன் கதைப்பதற்கு எங்கள் இரண்டு பேருக்கும் ஐந்துநிமிட அனுமதி தருமாறு கேட்டாள்.அவள் நேற்றைக்குப் பிறகு எதையும் சாதிக்கலாம் என்ற துணிவிலிருந்தாள்.அகமட் அனுமதி கொடுக்க, நாங்கள் இருவரும் பேர்சனல் மனேஜரின் அறைக்குப் போனோம்.கதவைத் திறந்த நான் „சால் வி கம் மடம்’என்றேன்,திரும்பிப் பார்த்து எங்கள் இரண்டு பேரையும் கண்டவர் உள்ளே வரச்சொல்லி சைகை செய்ய உள்ளே போய் அவர் முன்னால் நிற்க, இருக்கச் சொல்லிவிட்டு என்ன என்பது போலப் பார்த்தார், பார்த்தவரிடம்,அவள் எனது கணவருக்கு அடுத்த மாதத்திலிருந்து இங்கு வேலை இல்லை.அவர் வேறு பக்ரறிக்குப் போகிறார்.அதனால் தான் வேலையை இராஜினாமச் செய்யப் போகிறேன்.அவர் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டன் என்றவள் அவர் வேலைக்குப் போகிற இடத்தில் எனக்கு வேலை கிடைக்க றெக்கமண்ட் செய்ய மாட்டீர்களா தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று கெஞ்சுவது போல கேட்டாள்.

எங்கள் இரண்டு பேரையும் உற்றுப் பார்த்தவர், திடீரென்று உங்களுடைய இந்த மனைவியைப் பற்றி உங்களுடைய அபிப்பராயம் என்ன என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.திடீரென்று கேட்டதால் தடுமாறிப் போனேன்.என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவள் என்னைத் திரும்பிப் பார்த்திட்டுத் தலையைக் குனிந்தபடி இருந்தாள்.மடம் இறைவன் எனக்காக இன்னொரு மனைவியை மலேசியாவில் பிறக்க வைத்திருக்கிறான்,அவள் இவள்தான் என்றேன்.அவளின் கண்ணிலிருந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.பேர்சனல் மனேஜர் முகம் துடைக்கும் தாளைக் கொடுத்து கண்ணைத் துடைக்கச் சொன்னவர்,கொஞ்சம் பொறுங்கள் என்று அகமட்டுக்கு ரெலிபோன் செய்து அவ வரக் கொஞ்ச நேரம் செல்லும் என்று சொல்லிவிட்டு,அவளைப் பார்த்து உங்களுடைய கஸ்பெண்ட் தனது நாட்டுக்குப் போய்விட்டால் உங்களுடைய நிலை என்னவாகும் என்றவுடனேயே அவர் இங்கை இருக்கேக்கிலேயே அவர் மடியிலை தலை வைத்துச் செத்திடுவன்.அதற்குப்

பிறகு உயர் வாழ மாட்டன் என்றாள்.இதைக் கேட்டதும்,

பேர்சனல் மனேஜர் என்ன! என்று அதிர்ச்சியடைந்து அட கடவுளே என்று கதிரையில் சரிந்து கைகள் இரண்டையும் தலையில் பின்னுக்கு கட்டியபடி மேலே பார்த்தவர், உயிர் போகவில்லையென்றால் என்ன செய்வியள் என்றார்..அவருடைய நினைப்பிலேயே சாகும்வரை மலேசியாவில் வாழ்வேன்.அவருக்கு முன் செத்து அவர் வரும் வரைக்கும் அங்கே காத்திருப்பன் என்று மேலே காட்டினாள்.;

அப்ப செக்ஸ் இல்லாமல் கன்னியாகவே வாழ்வியளா என்றவுடன் முடியும் மடம் எங்கேயோ இருந்தவரை எனக்கு காட்டிய கடவுள் செக்ஸ் இல்லாமல் வாழும் வைராக்கியத்தையும் தருவார்.செக்ஸ் முக்கியந்தான் ஆனால் செக்ஸ்தான் வாழ்க்கையல்ல.மார்பைக் காட்டி அவர் இங்கை நிறைஞ்சு இருக்கிறார்

என்றாள்.உங்களுடைய கஸ்பெண்ட் எப்படியும் மூன்று வருடங்கள்வரை வேலை செய்வார்.அவருக்கு செக்ஸ் தேவைப்பட்டு அவர் பாலியல் தொழிலாளிகளிடம் போவதற்கு

அனுமதிப்பீர்களா.இல்லை விடமாட்டன் அதுக்குத்தான் நான் இருக்கிறேனே மடம் என்றாள்.பேர்சனல் மனேஜரின் உதட்டில் மெதுவாக சிரிப்பு வந்தது.தனது கணவனுக்காக உயிரைவிடத் துணிந்தவளை பெருமையோடு பார்த்தார்.அவளின் மனத்திடம் அவள் எனக்கு தன்னை அர்ப்பணித்து மனைவியாக வாழ்வதைப் பார்த்த நான் விதியை நினைத்துக் கொண்டேன்.

வேலையை மாற்றித்தர முயற்சிக்கிறன் என்று பேர்சனல் மனேஜர் சொல்லி அனுப்பிவிட்டார்.அவள் தன் வேலையைச் செய்யத் தொடங்கினாள்:.நான் வேறொரு இயந்திரத்தை ஒழுங்குபடுத்திவிட்டு தலையை நிமிர்த்த அவள் கையைக்காட்ட அவளிடம் போனேன்,புருசனாரே இதையும் பாருங்கள் என்றாள்.பார்த்தேன் சரியாகத்தானே இருக்கு என்றேன்.தெரியும் புருசனைப் பார்க்க வேண்டுமென்று நினைச்சன் அதுதான் என்று இழுத்தாள்.

ஒரு மணியத்தியாலத்திற்கு பிறகு அகமட் ஒரு கடிதத்துடன் அவளை நோக்கிப் போக,அவரை எதிர்கொண்டு கடந்து போன என்னைத் தடுத்து என்னுடன் வாஎன்று கூட்டிக் கொண்டு போய் அவளின் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.அவள் என்ன என்பது போல பார்க்க கடித உறையைத் திறந்து பார்க்கச் சொன்னார். கடித உறையை திறந்து கடிதத்தை வாசித்தவள் ஸ்ரூலைவிட்டு கீழே குதித்து தாங்யூ மடம் , தாங்யூ அகமட் சேர், தாங்யூ கொட் என்று கடிதத்தை நெஞ்சோடு பிடித்தாள்.

நான் வேலை செய்யப் போற அதே பக்ரறியில் அவளுக்கு அதே தினத்திலும் அதே நேரத்திலும் வேலை என்றும், ஜோகூர் பாருலிருந்து பேருந்து ஒழுங்கும் சச்சியில் என்எம்பி பக்ரறியின் புதிய கட்டிடத்தில் தொடங்கும் போது என்னுடைய வீட்டுக்கருகிலேயே அவளுக்கு வீடு என்றும் என்எம்பியின் கடிதத் தலைப்பில் வந்த பக்ஸ் கடிதத்துடன், பேர்சனல் மனேஜரின் தனிப்பட்ட தபால் தலைப்பில் என்னையும் அவளையும் வாழ்த்தி அந்தக் கடிதத்தை கெலாங் என்எம்பி பணியத்தில் கொடுக்கும்படியும் இருந்தது.கீழே ரான் எனக் கையொப்பமிட்டிருந்தார்.எங்கள் இரண்டு பேருக்கும் சந்தோசத்தக்கு அளவே இல்லை.புன்னகையுடன் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அகமட்;. அவளை எச்சரித்த பேரசனல் மனேஜரும் எனக்குப் புத்திமதி சொன்ன அகமட்டும் இன்று எங்கள் நிலை கண்டு அவர்களே உதவி செய்தார்கள்.அவள் என்மீது வைத்த காதல் வெற்றியடைந்துவிட்டது.

என்னுடைய பக்கம் திரும்பிய அகமட் வேர்க் இஸ் இம்போட்டன் என்றார் கிவ் ரெம்பொ ரூ நெக்ஸ் மந்த் என்றார்.

(தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *