Featureகட்டுரைகள்

முத்தையா முரளிதரன் துரோகியென்றால் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தமிழ்த்திரைப்படங்களை விற்பனை செய்தவர்களும் துரோகிகளே!… ஏலையா க.முருகதாசன்.

சும்மா கிடந்த கொதி எண்ணையை தம்முடைய காலில் தாமே ஊற்றிவிட்டு 800 ஊற்றிவிட்டதே என்று காலை உதறி உதறி யுரியூப் காணொளித் தளத்தில் தமிழகச் சில அரசியல்வாதிகளும் தமிழகத்திரைப்படத்துறையைச் நேர்ந்த சிலரும் துள்ளாத குறையாகத் துள்ளி விஜய் சேதுபதியையும், இலங்கை கிரிக்கட் அணி வீரரான முத்தையா முரளிதரனையும் தமிழினத் துரோகிகள் என்ற மாயை உருவாக்க,சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தது போல தமிழக யுரியூப் பதிவாளர்கள் வருவாயை தேடும் நோக்கில் தாங்கள்தான் இனமான உணர்வாளர்கள் என வேசம் போட்டு விமர்சனங்களை அள்ளி வீசிக் கொண்டே போகிறார்கள்.

இந்த விமர்சனங்களைப் பார்க்கும் போது உண்மையில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழர்கள் இரண்டு விடயங்களை எப்பொழுதும் கைவசம் வைத்திருப்பார்கள்.ஒன்று அவசரப்பட்டு பொன்னாடை போர்த்துவது, இரண்டாவது அவசரப்பட்டு துரோகிப் பட்டம் கொடுப்பது.

இப்ப அவர்கள் விஜய்சேதுபதிக்கும் முத்தையா முரளிதரனுக்கும் கொடுத்த பட்டம் தமிழினத் துரோகிகள்.

ஒன்றுமில்லாத பிரச்சினையை ஊதிப் பூதாகரமாக்குவதில் தமிழக ஊடகங்கள் கலாநிதிப் பட்டங்கள் பெற்றவர்களே.தமது வருமானத்திற்கு ஏதாவது சூடான விசயம் வேண்டுமென்பதில் சமாந்தரமான பாதையில் பயணிப்பவர்கள் தமிழகத் தொலைக்காட்சிகளும் யுரியூப் பதிவாளர்களும்.

தமிழகத்தை பூர்வீக வேராகக்; கொண்ட போதிலும் மலையகத்தில் பரம்பரையாக வாழ்ந்து இலங்கையனாக வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தையா முரளிதரன் என்ற தமிழனின் புகழால் „அவன் தமிழன் „ என்று பெருமை கொள்ளாமல்,800 திரைப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும்; முடிச்சுப் போட்டு போலிக்கூக்குரல் போட்டுக் கொண்டிருப்பகவர்களை நினைக்கும் போது அவர்களின் நாடகம் சரியாகவே புரிகின்றது.

இலங்கையின் கிரிக்கட் அணியில் இருக்கின்ற ஒரேயொரு தமிழன் முத்தையா முரளிதரன் என்பது யாவரும் அறிந்ததே.அது பெருமைக்குரிய விசயமே.

இலங்கை அரசாங்க அதிகாரிகளுடனோ, அமைச்சர்களுடனோ முத்தையா முரளிதரன் மட்டுமே தொடர்பிலிருப்பது போல தமிழகத்திலிருக்கும் சில

அரசியல்வாதிகளும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும் போலி ஆவேசம் கொள்கிறார்கள்.

இந்தியாவின் வடமாநிலத்திலிருந்தும்,கேரளத்திலிரந்தும்,தமிழகத்திலிருந்தும் பலவிதமான அன்றாட வாழ்விற்குத் தேவையான பாவனைப் பொருட்கள், உடைகள் போன்றவை இலங்கையில் இறக்குமதி செய்யப்படுகின்றன.அதனை உற்பத்தி செய்பவர்கள் இலங்கையின் வணிகத்துறை அமைச்சகர்களுடனோ அதிகாரிகளுடனோ வணிக நோக்கமாகத் தொடர்பு கொள்ளத்தான் செய்:வார்கள்.அவர்களுடன் விருந்துண்பார்கள்.அத்துறை சார்ந்த அமைச்சர்களோ அத்துறை சார்ந்த அதிகாரிகளோ இந்தியாவிற்கு வருகை தந்தால் இலங்கைக்கு திரைப்படம் உட்பட தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்தவர்கள் சந்திப்பார்கள் விருந்தளிப்பார்கள்.இது வணிக உலகின் யதார்த்தம்..அந்தப் பொருட்களை விற்கும் வியாபரிகளின் பண வருவாயிலிருந்தும் கணிசமான நிதியை இலங்கை வரித்திணைக்களம் வரியாக அறவிடுகிறது.இலங்கையின் பல வருவாய்க் கட்டமைப்பிலிருந்து கிடைக்கும் வரிப்பணமே இலங்கை மத்திய வங்கியின் திறைசேரிக்கான பணமாகும்.அதுவே இலங்கையின் அனைத்துக் கட்டமைப்புகளின் வரவு செலவினைக் கையாளுகின்றது.

இந்தத் திறைசேரிப் பணந்தான் வரவு செலவுக் கணக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பரிக்கப்படுகின்றது.இத்திறைசேரிப் பணத்திலிருந்துதான் முப்படைக்கும் ஒதுக்கப்படுகின்றது. ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்துதான் முப்படைக்கான ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கும் தமிழர்களை அழிப்பதற்கும் அப்பணத்திலிருந்தும் வாங்கப்பட்ட ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன.இது நிராகரிக்க முடியாத தர்க்கரீதியான உண்மை.

அடுத்த தர்க்க ரீதியான கேள்வி எழுகின்றது. ஆயுதம் வாங்க பணம் எங்கிருந்து கிடைத்தது.அதற்கான பதில் இலங்கை மத்திய வங்கியிலிருந்து கிடைத்தது என்பதே.மத்திய வங்கியின் திறைசேரிக்கு எப்படி பணம் கிடைத்தது என்றால் வருமான வரித்திணைக்களத்திற்கூடாக.அவர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்றால், வரி மூலம்,வரி எங்கிருந்து கிடைத்தது என்றால் இலங்கையின் அனைத்துக் கட்டமைப்புகளிடமும் இருந்து என்பதுதான் பதில்.

அவைகளில் ஒன்றான வணிகம் சார்ந்த தொழிலில் இறக்குமதியும் ஒன்று.இலங்கை பொருட்களை இறக்குமதி செய்:யும் நாடுகளில் ஒன்று இந்தியா.எனவே இந்தியாவிலிருந்து இறக்குமதியான இறக்குமதிக்கான வரி,மொத்த விற்பனையாளர்களுக்கான வரி, சில்லறை விற்பனையாளர்களுக்கான வரி என அனைத்தும் இலங்கையின் வருமானம்.இந்த வருமான நிதியிலிருந்துதான் ஆயுதமும் வாங்கப்படுகின்றது.

அந்த நிதியுந்தான் தமிழர்களைக் கொல்லும் ஆயுதமாக வாங்கப்பட்டது என்பதே உண்மை.எனவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் வருமானத்திலிருந்துந்தான் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்ற வகையில் தமிழகத்திலிருந்து சிங்களவர்களுக்கு கொம்பு சீவி விடும் சில அரசியல்வாதிகளும் சில திரைப்படத்துறையினரும் இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்யாதீர்கள்,அதன் வரிகளும் தமிழர்களை கொல்லப் பயன்படுகின்றது என தடுத்திருக்க வேண்டுமல்லவா.

இதைவிட தமிழகச் சினிமாப் படங்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதால் அதிலிருந்து, இறக்குமதி வரி, பட விநியோக வரி, படத்தை திரையிடும் தியேட்டர் கொடுக்கும் வரி, படம் பார்ப்பவர் நுழைவிதழ் எடுக்கும் போது அவர் அவரையறியாமலே நுழைவிதழ் விலையுடன் சேர்த்துக் கொடுக்கும் வரி இவையுந்தான் அரசாங்க வருவாய்.அந்த வருவாயும், மொத்த வருவாயின் ஒரு பகுதியாகும்.

எனவே தமிழகத் திரைப்படமும் இலங்கை அரசாங்கம் ஆயுதம் வாங்க உதவியிருக்கின்றது.எனவே தமிழர்களைக் கொல்ல தமிழ்ச் சினிமாப் படங்கள் உதவியிருக்கின்றன.

விஜய் சேதுபதிக்கு எதிராகவும், முத்தையா முரளிதரனுக்கு எதிராக கருத்துக்கூறிய திரைப்படத்துறையைச் சார்ந்த பாராதிராஜா,வைரமுத்து,தாமரை, உட்பட அனைவருமே இலங்கைத் தமிழர்களைக் கொல்ல ஆயுதம் வாங்க நிதி கொடுத்தவர்கள் என்பதும் உண்மைதான்.ஒரு படத்தை எடுப்பதன் மூலம் வருவாயைத் தேடிக் கொண்ட இயக்குனர் பாரதிராஜா,திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வருவாயைப் பெற்றுக் கொண்ட கவிஞர் வைரமுத்து, கவிஞர்தாமரை  ஆகியவர்களின் படங்கள் இலங்கையில் திரையிடப்பட்டதால் அவர்களையும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான துரோகிகள் என்று ஏன் சொல்லக்கூடாது.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடித்து படம் வெளிவந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பிரளயமும் நடக்கப் போவதில்லை.அது இலங்கை அரசிற்கு சார்பான ஆவணமாக மாறி ஐக்கியநாடுகள் சபை இலங்கை அரசிற்கு சார்பாக எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை.

எனவே இலங்கைக்கு எங்களுடைய திரைப்படங்களை ஏற்றுமதி செய்வதால்,அப்படங்களும் ஒருவழியில் இலங்கை அரசிற்கு வருவாயை ஈட்டிக் கொடுக்கின்றது.அந்த வருவாயிலிருந்தும் ஒரு பகுதி ஆயுதம் வாங்கப்படுகின்றது. அந்த ஆயுதங்களுந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்தது,தமிழர்களைக் கொன்றது என்று அறிவுபூர்வமாக, தர்க்கரீதியாக சிந்தித்து தமிழகத் திரைப்படங்களை தமிழகத் திரைப்படத் துறையினர் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யாமல் விடுவார்களா.

எனவே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்த படத்தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் , நடிக நடிகைகள், பட உருவாக்கத்திற்கு பணி செய்தவர்கள் அனைவருமே துரோகிகள்தான்.விஜய் சேதுபதி துரோகி என்றால், இலங்கையுடன் திரைப்பட வணிகம் தொட்டு, அனைத்து வணிகங்களையும் உள்ளடக்கிய ஏற்றுமதி வணிகம் செய்தவர்கள் அனைவருமே துரோகிகள்தான்.

எனவே இலங்கையைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரனின் திரைப்படம் வருவதைத் தடுப்பதே அவர்களின் நோக்கம். இலங்கைத் தமிழர்களிடமிருந்து எந்த விமர்சனமும் பெரிதாக வரவில்லை. காரணம் முத்தையா முரளிதரனின் படம் வெளிவந்தாலென்ன வெளிவராவிட்டால் என்ன இலங்கைத் தமிழர்களுக்கு அதைப் பற்றி பெரிய அக்கறை எதுவுமில்லை.

படம் வந்தால் விரும்பியவர்கள் பார்ப்பார்கள், விரும்பாதவர்களும் ஏதாவது பிழையைத் தேடுவதற்காக பார்ப்பார்கள்.இப்படத்தில் விஜய் சேதுபதியை நடிக்காமல் தடுத்து நிறுத்தியமை,இனமான உணர்வென்ற போலிப் போர்வை.

2009 ஆண்டு போர் முடிந்தது தனக்கு மகிழ்ச்சியான நாள் என்று முத்தையா முரளிதரன் சொல்லியதன் அர்த்தத்தை தமக்குச் சாதகமாக மாற்றி தமிழக திரைப்படத்துறையைச் சேர்ந்த சிலரும், தமிழக அரசியல்வாதிகள் சிலரும் அவரைத் தமிழினத் துரோகியாகக் காட்ட முனைகிறார்கள்.

போர் முடிவுக்கு வந்த போது அவர் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்கள் அனைவருமே மகிழ்ந்தார்கள்:தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்துவிட்டதே என்ற கவலை அவர்களிடமிருந்த போதிலும்,போரினால் உறவுகளை இழந்தவர்களும், குடியிருந்த வீடுகளை இழந்தவர்களும், காணிகளை இழந்தவர்களும், வசதியாக வாழ்ந்த வீடுகளை, இருந்த இடத்தைவிட்டு கையில் கிடைத்ததை மட்டுமே எடுத்துக் கொண்டு அங்குமாறி இங்கு இங்குமாறி அங்கென எல்லா ஊர்களுக்கும் ஓடி , மரநிழலிலும்,சாக்குத் தடுப்பிலும்,தகரத் தடுப்பிலும் வாழ்ந்து மக்கள் அலையோ அலையென அலைந்து போர் முடிந்தவுடன் ஆறுதல் மூச்சுவிட்டார்கள்.போர் முடிந்தது என மகிழ்ந்தார்கள்.இனியாவது ஒரு இடத்தில் நிம்மதியாக வாழலாம் என அமைதியானார்கள்.பலவருடப் படபடப்பான இதயம் போர் முடிந்ததும் சுயநிலைக்கு வந்தது.

இன்று விஜய் சேதுபதியையோ,முத்தையா முரளிதரனையோ துரோகி என விமர்சிப்பவர்கள்,ஓடியோடிக் களைத்த மக்களின் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிருக்கிறார்களா. வாழ்ந்தால்தான் அந்த வலி தெரியும்.ஊடக வெளிச்சத்திற்காகவும் பரபரப்பிற்காகவும் உசுப்பேத்தல் கருத்துக்களை வெளயிடுபவர்களின் படங்கள் இலங்கையில் திரையிடப்பட்டிருந்தால் அவர்கள்தான் பெருந்துரோகிகள்.

நீங்கள் உண்மையான அக்கறையுள்ளவர்களானால்,கமல்ஹாசன் – அர்ஐPன் நடிப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது  கேவலப்படுத்தி வெளிவந்த குருதிப்புனல் படம் தமிழகத்தில் அமோகமாக

ஓடியதே அப்பொழுது என்ன செய்தீர்கள்.கிட்டுவை கொச்சைப்படுத்தி அந்தப் படத்தில் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதே அப்பொழுது எங்கே போனீர்கள்.

இலங்கைத் தமிழனை வைத்து நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம்.போதாக்குறைக்கு தொலைக்காட்சி ஒன்று இலங்கையில் ஒருவரை வைத்து முரளிதரனுக்கு எதிராக பேட்டியொன்றை நடத்தியது.அவர்கள் தமது தொலைக்காட்சியைப் பார்க்க வணிகத்தை இனமான போர்வையில் செய்கிறார்கள்.

இப்படம் தடைப்படுவதன் மூலம் இலங்கை கிரிக்கட் அணியிலிருக்கும் சிங்கள வீரர்கள் மகிழ்ச்சியடைய வைக்க முயற்சிக்கிறார்கள்.

ஒரு தமிழ் கிரிக்கட் வீரனின் விளையாடடு விவேகத்தை எடுத்துக்கூற வரும் திரைப்படத்துக்கு முட்டுக்கட்டை போட யார் எந்த உளவு நிறுவனம் உங்களைப் பயன்படுத்துகின்றது என்பது இலங்கைத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இதைவிட, தமிழக,யூரியூப் பதிவாளர்கள் தமக்கு வருவாயைத் தேடுவதற்காக முத்தையா முரளிதரனைப் பற்றியும் ,விஜய் சேதுபதியைப் பற்றியும் பெரிய ஆய்வுகளைச் செய்து சப்ஸ்கிறைப் பண்ணுங்க, பெல் படுஇடனை அமத்துங்க என்று சொல்லி வியாபாரம் செய்கிறார்கள்.

பாரதிராஜா ஐந்து ஆண்டுகளுக்கு முந்தி ஆனந்தவிகடனில் „தமிழ்நாட்ல எங்கே தமிழன் இருக்கிறான், எல்லாரும் இங்கிலிசிலை பேசுறாங்க „ என்று சொல்லி ஒரு பேட்டி கொடுத்தார்.அந்தப் பேட்டியில் அவர் 222 ஆங்கில வார்த்தைகளைப் பாவித்திருந்தார். இதுதான் அவரின் இலட்சணம்.

முத்தையா முரளிதரனின் 800 திரைப்படம் யாராவது ஒரு நடிகர் நடித்து வரத்தான் போகின்றது.எங்கள் ஊர்த்தமிழன் என்று உலகம் பூராவும் உள்ள இலங்கைத் தமிழர்களும்,நம்நாட்டவன் என்று சிங்களவர்களும் பார்க்கத்தான் போகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *