Featureநிகழ்வுகள்

“அக்கினிக்குஞ்சு” இணையத்தளத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா இசையருவி பாடல் போட்டி 2021.

“அக்கினிக்குஞ்சு” இணையத்தளத்தின்

10வது ஆண்டு நிறைவு விழா                                     

இசையருவி பாடல் போட்டி 2021

JAYANI JEWELLERY & PJ HOTELS ஆதரவில்

இணையவழி காணொளியில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் ஆஸ்திரேலியாவில் வாழும் 16 வயதுக்குட்பட்ட எவரும் பங்கு பெற்றலாம். மற்றும் உலகெங்கினும் பரந்து வாழும் பாடகர்கள் சிறப்பு பாடகர்களாக கலந்து கொள்ளலாம். வயது எல்லை இல்லை.

இசையருவி பாடல் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான விபரங்கள்!

  1. அவுஸ்திரேலியாவில் வாழும் எவரும் இப்போட்டியில் பங்குகொள்ளலாம்.
  2. 16 வயதுக்கு உள்பட்டவர்கள் மாத்திரமே போட்டியில் கலந்து கொள்ளலாம்
  3. போட்டியில் தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாடுதல் வேண்டும் என்பதுடன் சுருதி தாளத்துடனும் பாடுதல் வேண்டும்.
  4. பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் தெரிவுப் போட்டி ஆரம்பமாகும் திகதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னராக அதாவது 31.12.2020 இற்கு முன்னர் தங்களைப்பற்றிய விபரங்களை எமக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.
  5. தெரிவுப்போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கட்டணம் 50 அவுஸ்திரேலிய வெள்ளிகள் (Aus $ 50) ஆகும். 31.12.2020 இற்கு முன்னர் அனுமதிக்கட்டணத்னைச் செலுத்தி விண்ணப்பித்தல் வேண்டும்.
  6. தெரிவுப்போட்டியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட போட்டியாளர்களுக்கான இறுதிப்போட்டி திகதி பின்னர் அறியத்தரப்படும்
  7. தெரிவுப் போட்டியின்போது போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் முதலில் தமக்கு விருப்பமான ஒரு பாடலைப் பாட அனுமதிக்கப்படுவர்.
  8. இறுதிப்போட்டியில் வெற்றியீட்டுபவர்கள் பற்றிய முடிவு நடுவர்களின் புள்ளி அடிப்படையிலும் பார்வையாளர்களின் வாக்களிப்பாலும் தீர்மானிக்கப்படும்
  9. இந்தப் போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் கீழ்வரும் விபரங்களுடன் 31.12.2020 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ விண்ணப்பித்தல் வேண்டும்.

(1) முழுப்பெயர்:                                                     

(2) புனைபெயர் (விரும்பினால்):

(3) முகவரி:

(4) தொலைபேசி இலக்கம்:

(5) மின்னஞ்சல் முகவரி:

  1. தெரிவுப்போட்டி இறுதிப்போட்டி என்பவை நடைபெறவுள்ள நேரம் பற்றிய விபரங்கள் போட்டியாளர்களுக்குப் பின்னர் அறியத்தரப்படும்.

போட்டி ஒருங்கிணைப்பாளர்:

ஶ்ரீ நந்தகுமார் – 0415 405 361

போட்டியில் பங்குபற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்குத் தொடர்பு கொள்ள:
Email: tamildcc@gmail.com // akkinikkunchu@hotmail.com  // sri.srinanthakumar@gmail.com

அல்லது

யாழ் எஸ்.பாஸ்கர் – 047 015 6818 ஸ்ரீ நந்தகுமார் 041 540 5361

 

Bank details:

Tamil Development Cultural Center
BSB: 033 137
Acc number: 65 36 79

Westpac Bank

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.