கதைகள்
நடுக்கம்!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

விரல்களில் நடுக்கமென சிகிச்சைபெற வந்த சிவாவுக்கு சிகிச்சையளித்த
பிசியோதெரபிஸ்ட் எதையாவது பட்டனை அழுத்தி விடுவதுபோல் பயிற்சி செய்யச் சொன்னார். அப்பயிற்சி மூலம் குணமடைந்த சிவா ஓராண்டுக்குப் பிறகு திரும்பவும் மருத்துவரிடம் வரவே மருத்துவர்,
“என்ன சிவா, திரும்ப வந்து வந்துவிட்டீர்கள்? வேறு ஏதாவது பிரச்சனையா?” என்றார்.
“அதே பிரச்சனைதான், டாக்டர்”
“ஏன்? என்ன ஆயிற்று?”
“க்ரௌன் காசினோவை மூடிவிட்டார்கள்” என்றான் வருத்தமுடன் சிவா.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()